இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகம் - சபாநாயகர் அப்பவு
நமது மாநிலத்தில் முதலில் தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது கணிதம், நான்காவது அறிவியல், ஐந்தாவது வரலாறு என இப்படி தான் கல்வி கற்க வேண்டுமென சட்டம் கொண்டுவரப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ சமுதாயம் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக முழுவதும் பள்ளி கல்லூரிகளில் சட்டமன்ற நாயகன் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதல் சட்டப்பேரவையில் கலைஞர், சுயாட்சி, கலைஞரின் பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், முந்தைய காலக்கட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி பயின்று உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். மற்ற சமூகத்தினர் கல்வி கற்கவோ அல்லது உயர் பதவிகளுக்கோ செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. அப்போது பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில் கல்வி எல்லோருக்கும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல. அனைவரும் கல்வி வழங்க வேண்டும் என்று சொன்னதன் அடிப்படையில் தான் 1835 மெக்காலே கல்வி குழு அமைத்தன் அடிப்படையில், அனைவரும் கல்வி கற்கும் வகையில் தாய்மொழி வழி கல்வி கொண்டுவரப்பட்டது. 1835 நமது தமிழ்நாட்டில் தமிழ் மொழியும், தெலங்கானாவில் தெலுங்கு மொழியும், கேரளாவில் மலையாளம், கன்னடாவில் கன்னடம் மொழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொழிகள் சார்ந்த பகுதிகளாக இருந்தது. எனவே, அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்றால் முதலில் அவர்களின் தாய்மொழிக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே, நமது மாநிலத்தில் முதலில் தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது கணிதம், நான்காவது அறிவியல், ஐந்தாவது வரலாறு என இப்படி தான் கல்வி கற்க வேண்டுமென சட்டம் கொண்டுவரப்பட்டது.
தந்தை பெரியார் பெண்கல்வி, சம உரிமை வேண்டும் என போராடினார் அதனை நிறைவேற்றியவர் கலைஞர். இதனால்தான் இன்று தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காதவர்களே இல்லை என கூறலாம். பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்விக்காவும், பெண்களின் முன்னேற்றத்திற்காவும், சமூக நீதிக்காகவும் ஆற்றிய பணியை மறக்க முடியாது. சமீபத்தில் பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி உயர் ஜாதியினர் 10.3 சதவீதமும், அரபி மொழி பேசும் முஸ்லீம் 5 சதவீதம் உள்ளனர். இவர்கள் அனைவரும் பட்டம் பெற்றுள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 69 சதவீதம் பேரில் 2.3 சதவீதம் பேர் மட்டுமே பட்டம் படித்துள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் என தெரிவித்தார். மேலும், பெண்களை படி, படி என்று சொன்னதன் விளைவு. தற்போது இந்தியாவில் 26 சதவீதம் பெண்கள் பட்டம் படித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பட்டம் முடித்தும், பட்டம் படித்து வரும் பெண்கள் 72 சதவீதம் ஆகும். இதற்கு காரணம் முன்னாள் தலைவர்களாக பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் தான் காரணமாகும் என தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் பேசுகையில், தந்தை பெரியார் 1920- ல் செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் பெண்கல்வி, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த பெரியாரின் கனவை 60 ஆண்டுகளுக்கு பின் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இதனை நிறைவேற்றினார். பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 8 படித்தால் 5000, 10 படித்தால் 10 ஆயிரம், 12 படித்தால் 20 ஆயிரம் என திருமண உதவித்தொகை கொடுத்து ஊக்கப்படுத்தியவர் கலைஞர். பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வரவேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பேர் பெண்கள் பொறுப்பில் உள்ளார்கள். கலைஞர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து உழைத்து முன்னேரியவர் அதுபோன்று மாணவச் செல்வங்கள் ஆற்றலை வளர்த்து முன்னேறி உயர் நிலைக்கு வரவேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.