மேலும் அறிய

பொன்முடிக்கு மீண்டும் பதவி..! தீர்ப்பின் நகல்படி சட்ட நடவடிக்கை..! - சபாநாயகர் அப்பாவு

”ராகுல் காந்தி, லட்சத்தீவு முகமது பைசல், காசிப்பூர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும்”

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில்  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு கண்காட்சியை  திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனை அங்காடியையும் பார்வையிட்ட அவர் அங்கு செய்தியளர்களை சந்தித்தார். 

உயர்சாதியினருக்கான நாடு மாறியது:

அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் 33 மாத கால சாதனைகளை விளக்கும் வகையில் சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் கண்காட்சியை திறந்து வைப்பதல் பெருமை அடைகிறேன். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு  மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள். பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாச்சாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்கலாம் என்ற நிலை எல்லாமே உயர் வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது. குறிப்பாக 5 முதல் 10 சதவிகிதம் உயர் சாதியினருக்கான ஒரு நாடாக இருந்ததை எல்லாருக்குமான நாடாக மாற்றியது, அந்த கல்வியை எல்லோருக்கும் கொடுத்தது கால்டுவெல், ஜியு போப், பிரிட்டிஸ் ஆட்சி, தென்னியந்திய  திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்டோர்கள் தான். 

கால்டுவெல் சொன்ன கலாச்சாரம்:

அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதை தாண்டி இந்திய தமிழக கலாச்சாரத்தின் படி அவர்கள் தன்னை தானே உருவாக்கிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய மக்களுக்கு கல்வியை இலவசமாக கற்று கொடுத்தனர். திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு 80 சதவிகிதம் கிறிஸ்தவ அமைப்புகள் மூலம் நடத்துகின்ற கல்வி கற்கும் முறை. 20% அரசு மற்றும் தனியார் மூலம் நடத்துகின்ற கல்வி. உயர் சாதியினர் கல்வி கற்கும் முறையை மாற்றி எல்லோருக்குமான கல்வியாக கொண்டு வந்தது தான்  கலாச்சார சீரழிவு என்று அவர்கள் சொல்வார்கள், ஆனால் 90 % மக்கள் கால்டுவெல் சொன்ன கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். 

அமைச்சர் பொன்முடி தண்டனை தடை மற்றும் மீண்டும் பதவி:

உயர் கல்வித்துறை அமைச்சராக  பொன்முடி  இருந்தார். ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தண்டனை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நேற்று அந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டது.   நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதால் அவர்கள் வகிக்கும் பதவி அந்த தண்டனை காலத்தை பொறுத்து அந்த பணியில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவர்.  அதன்படி அவர் பதவி நீடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்குவது எவ்வாறு என்றால் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், உத்திரபிரதேசத்தில் காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு  சட்டப்பேரவை முதன்மைச் செயலருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்பு விரைவில் வெளியாகும், அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget