Senthil Balaji Arrest: செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை - மத்திய இணை அமைச்சர் விகே சிங்
கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ளுவோம். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கின்றது,
நெல்லை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. வள்ளியூரில் துவங்கப்பட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் விகே சிங் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் பொழுது, இந்த அலுவலகத்தை கட்டி முடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதை தொடங்கி வைப்பதில் மனம் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
தொடர்ந்து அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது குறித்த கேள்விக்கு, அமலாக்கத்துறை யாரையும் தாக்கி இருக்காது. அமலாக்கத்துறை ஊழல் செய்தவர்களிடம் விசாரணை மட்டும் தான் மேற்கொள்ளும், அவர்கள் தாக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை, ஊழல் செய்ததற்கான உண்மை தகவல் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றது, ஆனால் உண்மையை மறைப்பதற்கு தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர், ஊழல் குற்றச்சாட்டால் தான் அமைச்சர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.
அண்ணாமலையின் பேச்சு மற்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ளுவோம். அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கின்றது, இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பதை பின்னர் முடிவு செய்வோம். தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவாரா என்பது எனக்கு தெரியாது, இதைப் பற்றி மோடி இடம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்