மேலும் அறிய

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 6,871 வேட்புமனுக்களில் 173 மனுக்கள் தள்ளுபடி

’’நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 2,060 பதவிகளுக்கு 6,871 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் 173 மனுக்கள் தள்ளுபடி’’

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்று முன் தினம் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நடைபெற்று முடிந்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 6,871 வேட்புமனுக்களில் 173 மனுக்கள் தள்ளுபடி

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 13 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 85 பேரும், 9 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 59 பேரும், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை 689 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். 30 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 200 பேரும், 14 யூனியன் கவுன்சிலர் பதவிகளுக்கு 122 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 6,871 வேட்புமனுக்களில் 173 மனுக்கள் தள்ளுபடி

நெல்லை மாவட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு 78 பேர், ஒன்றிய வார்டுகளுக்கு 836 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,244 பேர், கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு 4,713 பேர் என மொத்தம் 2,069 பதவிகளுக்கு 6,871 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் 173 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு மொத்தம் 78 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் ஒருவரது வேட்புமனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு மீதி 77 பேர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒன்றிய வார்டுகளுக்கு 839 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 47 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. களக்காடு யூனியனில் ஒருவரது மனு மட்டும் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. மீதி 791 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 1,245 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 39 பேரின் மனுக்கள் தள்ளுபடி ஆனது. மீதி 1,206 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 4,717 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். அதில் 86 மனுக்கள் தள்ளுபடி ஆனது. 4,628 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லை மாவட்டத்தில் 6,871 வேட்புமனுக்களில் 173 மனுக்கள் தள்ளுபடி
 
வாக்கு எண்ணும் மையங்களை பொறுத்தவரை திருக்குறுங்குடி டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, வள்ளியூர் ஒன்றியம் -வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜா கலைக்கல்லூரி, ராதாபுரம் ஒன்றியம் -கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, நாங்குநேரி ஒன்றியம் -விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி, பாளையங்கோட்டை ஒன்றியம் - பொன்னாகுடி ரோஸ்மேரி கல்லூரி, சேரன்மாதேவி ஒன்றியம் - சேரன்மாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி, அம்பை ஒன்றியம் -விக்கிரமசிங்கபுரம் அமலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குடி ஒன்றியம் -இடைகால் மெரிட் பாலிடெக்னிக் கல்லூரி, மானூர் ஒன்றியம் &பழையபேட்டை ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget