மேலும் அறிய
Advertisement
’பசுமை மின்சாரத்தை அதிகப்படுத்தும் ரயில்வே நிர்வாகம்’ - எங்கே எவ்வளவு பயன்படுகிறது தகவல் இதோ !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100% பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.
”தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் பசுமை மின்சார பயன்பாட்டுக்காக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஐந்து காற்றாலை அமைப்புக்களை நிறுவியுள்ளது.
மதுரை கோட்டரயில்வே அலுவலகத்தில் சூரியசக்தி மூலம்11கி- V மின்சாரம் தயாரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப் படுகிறது. மதுரை ரயில்நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100கி- V சூரியசக்திமின்சாரம் தயாரிக்கும் போட்டோ-V தகடுகள் அமைக்கப்பட்டு சூரியசக்திமின்சாரம் தயாரிக்கப்படுகிறது.@drmmadurai pic.twitter.com/aoCPwkqkSh
— Arunchinna (@iamarunchinna) August 6, 2022
2019-ம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த காற்றாலைகள் ஒவ்வொன்றும் 2.1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ளவை. ரூபாய் 74 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலைகள் மொத்தமாக 10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் மிக்கவை. கடந்த 2021 - 22 ஆம் நிதி ஆண்டில் இந்த காற்றாலைகள் 25.686 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் தயாரித்து உள்ளன. இதன் மூலம் ரூபாய் 14.54 கோடி மின்சார செலவு குறைந்துள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடந்த ஜூலை மாதம் வரை மொத்தமாக 91.564 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 48.54 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 13 அன்று முதல் முறையாக அதிக அளவாக 2,61,412 கிலோ வாட் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காற்றாலை மின்சாரம் மூலமாக கடந்த ஆண்டு மின்சார ரயில்கள் இயக்க 1.86 சதவீத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனை நிறைவு.. பறிமுதலானது என்ன?
மேலும் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டைக் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100% பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தேர்தல் 2024
தேர்தல் 2024
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion