நெல்லையில் "Storming operation" என்ற பெயரில் காவல்துறை சோதனை - ஒரேநாளில் 830 வழக்குகள் பதிவு
’’இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்களை சோதனை செய்து அது குற்ற சம்பவங்களில் தொடர்புடையதா என ஆய்வு மேற்கொண்டு வழக்குகள் பதிவு’’
நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக நெல்லை சந்திப்பு, மக்கள் கூடும் இடங்கள், அதிகமாக வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட 30 இடங்களுக்கும் மேல் காவல்துறையினர் நேற்று இரவு 9 மணி முதல் "ஸ்ட்ரோமிங்க் ஆபரேஷன்" என்ற பெயரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்களை சோதனை செய்து அது குற்ற சம்பவங்களில் தொடர்புடையதா என்றும் மேலும் குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வரும் நபர்கள் இரவுநேரத்தில் இடம் பெயர்கிறார்களா என்ற அடிப்படையிலும் சோதனை நடைபெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு நெல்லை மாநகர பகுதியில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில் அதனையும் பொருட்படுத்தாது காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குற்ற சம்பங்களை தடுக்கும் பொருட்டு கொட்டும் மழையிலும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி கையில் டார்ச் லைட் உடன் வாகனங்களை நிறுத்தி அதற்கான ஆவணங்களையும் சோதனையிட்டு பின்னர் அவர்களை அனுப்பினர், அதேபோல சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களில் முறையான ஆவணங்கள் இன்றி செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் கூறும்பொழுது, இது காவல்துறையில் நடைபெறும் முக்கிய ஆபரேஷன். இடம்பெறும் குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கிலும், இரவு நேரத்தில் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக முயற்சிக்கும் நபர்களை தடுத்து கைது செய்யும் நோக்கிலும், மாநகர காவல்துறை சார்பில் ஆபரேஷன் என்ற பெயரில் நடைபெறும் குறிப்பாக நேற்று இரவு நெல்லை மாநகரில் மட்டும் 30 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சோதனையின் போது விசாரித்து அவர்களின் வாகன பதிவு எண்கள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறை செயல்படும். அதற்கு இந்த ஆபரேஷன் பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும் நேற்று இரவு மட்டும் 830 வழக்குகள் வாகன சோதனையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 9 நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். காவல்துறையினர் இரவில் நடத்தும் இது போன்ற சோதனைகள் அவ்வப்போது நடைபெற்றால் குற்றம் செய்ய நினைக்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன், குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறையும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.
உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி - தென்னிந்தியாவில் இருந்து பயிற்சிக்கு தேர்வான கோவில்பட்டி மாணவர்