மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட தமிழக முதலமைச்சரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டலத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் 340 பயனாளிகளுக்கு ரூபாய் 111.95 கோடி பண பலன்கள் வழங்கும் விழா மற்றும் பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா ஆகியவை நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வைத்து  தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  புதியதாக கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட பணியாளர்களுக்கான ஓய்வறையை திறந்து வைத்த பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கான பண பலன்களை அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் வழங்கினார் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் பேசும்போது, 

போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட தமிழக முதலமைச்சரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நிதி ஒதுக்கீடும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் போராடி எந்த பலனையும் பெறவில்லை. போராடாமலையே அனைத்து பலன்களும்  தற்போது தொழிலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். தொழில் சங்கத்தால் அதிமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதுவும் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில் அதனை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.  மெட்ரிக்ஸ் முறையை பின்பற்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் 3000 ரூபாய் வரை கூடுதலாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. யாரும் போராடாமல் ஊதிய உயர்வை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துள்ளோம். பண பலன்கள் படிப்படியாக நிதிநிலை பொறுத்து உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் மாதம் தொடங்கி 30 நாட்களுக்கு பின்னர் தான் ஊதியம்  வழங்குகிறார்கள். ஆனால்  தமிழகத்தில் மாதம் தொடங்கிய முதல் நாளில் ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் 1 ம் தேதி வழங்கப்படுவதற்கு மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டமும் தான் காரணம்.

ஒரே கல்லில் 2 மாங்காயாக மகளிருக்கான இலவச பயணம் வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் எந்த பிரச்சனையும் இல்லாமல் போக்குவரத்து துறைக்கு முறையாக ஊதியமும் வழங்கப்படுகிறது. இன்று 293 கோடி இலவச பயணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முதல்வர் ஓயாமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார். தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போதும் கூட கண் துஞ்சாமல் பணி செய்து பேருந்தை தொழிலாளர்கள் இயக்கி வருகிறார்கள். நீண்ட ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் பண பலன்களை வழங்குவதற்கு இத்தகைய விழாக்கள் எதற்கு என கேள்வி கேட்கிறார்கள். அரசால் கொடுக்கப்படக்கூடிய அனைத்து பணபலன்களும் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதனாலேயே இது போன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது. 111.95 கோடியில் பண பலன்கள் நெல்லை மாவட்டத்தில் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget