மேலும் அறிய

Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்களில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தொடர்பான ஆய்வுக்கூட்டமானது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் தெரிவித்ததாவது, ”தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் இணைந்து குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்சனை தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இலுப்பையூரணி, மீனாட்சிபுரம், கொடுக்காம்பாறை, சிவந்திபட்டி, முடுக்குமீண்டான்பட்டி, ஈராச்சி, பாண்டவர்மங்கலம், இனாம்மணியாச்சி, ஆவல்நத்தம், கிழவிபட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட அளவுகளின்படி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

இனாம்மணியாச்சி, லிங்கம்பட்டி, வரதராஜபுரம், உசிலம்பட்டி, கட்டாலங்குளம் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும். அதிகாரிகள் மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் சரி செய்திட வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்ததாவது: குடிநீர் பிரச்சனை தொடர்பான பணிகளை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான பணிகளுக்கு உடனடியாக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகளை தொடங்க வேண்டும்” என தெரிவித்தார்.

Women's Reservation Bill: ’பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வரும், ஆனா வராது’.. சூசகமாக சொன்ன அமைச்சர் கீதா ஜீவன்..!

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு மறுவிண்ணப்பங்கள் செய்யப்பட்டு வருவதை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீதாஜீவன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்ய வரும் பெண்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் பெண்களை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன் . ஏனென்றால் எந்த ஒரு அடிப்படை செயலையும் செய்யாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை வரைமுறைப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள். அதனால் வராது . இது கண்துடைப்புக்காக பாஜக தேர்தலை நோக்கி இதை தாக்கல் செய்துள்ளனர் வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான் . ஆனால் இதை உடனடியாக பெண்கள் நலனுக்காக செய்யலாம் செய்யவில்லை தேர்தலுக்காக செய்கின்றனர்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Anganwadi Job: தேர்வே கிடையாது- நிரந்தர அரசு வேலை- 7783 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
Embed widget