Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra Price: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியாரா கார் மாடலில் வழங்கப்படும் டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Tata Sierra Price: டாடா மோட்டார்ஸ் சியாரா கார் மாடலின் விலை வரம்பானது ரூ.11.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.29 லட்சம் வரை நீள்கிறது.
டாடா சியாரா விலைப்பட்டியல்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய, சியாரா எஸ்யுவி கார் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+ வேரியண்ட்களில் 1.5 லிட்டர் ரெவெட்ரான் பெட்ரோல், 1.5 லிட்டர் ஹைபீரியன் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் கைரோஜெட் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களானது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அக்கம்ப்ளிஸ்ட் வேரியண்டின் விலையானது ரூ.17.99 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரை நீள்கிறது. அதேநேரம், அக்கம்ப்ளிஸ்ட்+ வேரியண்டின் விலையானது ரூ.20.99 லட்சத்தில் தொடங்கி ரூ.21.99 லட்சம் வரை நீள்கிறது.
சியாரா டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை பட்டியல்
| சியாரா வேரியண்ட் | விலை |
| டாடா சியரா 1.5L ரெவோட்ரான் (P) MT அக்கம்ப்ளிஸ்ட் | ரூ. 17.99 லட்சம் |
| டாடா சியரா 1.5லி ஹைபரியன் (பி) ஏடி அக்கம்ப்ளிஸ்ட் | ரூ. 19.99 லட்சம் |
| டாடா சியாரா 1.5L Kyrojet (D) MT அக்கம்ப்ளிஸ்ட் | ரூ. 18.99 லட்சம் |
| டாடா சியரா 1.5L கைரோஜெட் (D) AT அக்கம்ப்ளிஸ்ட் | ரூ. 19.99 லட்சம் |
| டாடா சியரா 1.5லி ஹைபரியன் (பி) ஏடி அக்கம்ப்ளிஸ்ட் பிளஸ் | ரூ. 20.99 லட்சம் |
| டாடா சியரா 1.5L கைரோஜெட் (D) MT அக்கம்ப்ளிஸ்ட் பிளஸ் | ரூ. 20.29 லட்சம் |
| டாடா சியரா 1.5லி கைரோஜெட் (D) AT அக்கம்ப்ளிஸ்ட் பிளஸ் | ரூ. 21.29 லட்சம் |
அம்சங்கள் நிறைந்த டாப் எண்ட் வேரியண்ட்கள்:
அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+ ஆகியவை சியரா மாடலின் டாப் வேரியண்ட்கள் என்பதால், இதில் ஏராளமான அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதன்படி, Night Saber Bi-LED பூஸ்டர் ஹெட்லேம்ப்கள், 30+ பயன்பாடுகளுடன் கூடிய ஆர்கேட் சூட், கெஸ்டர் கன்ட்ரோலுடன் கூடிய பவர்ட் டெயில்கேட், நினைவக செயல்பாட்டுடன் கூடிய 6-வே பவர்ட் ட்ரைவர் இருக்கை, 2 பின்புற 65W USB சார்ஜிங் ஸ்லாட்டுகள், AR- அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் 75 அம்சங்களுடன் கூடிய iRA இணைக்கப்பட்ட கார் சூட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
ஓட்டுநர் டிஜிட்டல் டிஸ்ப்ளே, சென்ட்ரல் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் முன் பயணி டிஸ்ப்ளே ஆகியவற்றிற்கான ஹாரிசன் வியூ டிரிபிள்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு உள்ளது. சியரா காரில் சென்ட்ரல் ஸ்பீக்கர், சப் வூஃபர் மற்றும் சோனிக்ஷாஃப்ட் சவுண்ட்பார் கொண்ட ஜேபிஎல் பிளாக் 12-ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டமும் உள்ளது. டால்பி அட்மாஸ் சேர்க்கப்பட்டதன் மூலம் ஆடியோ அனுபவம் மேலும் மெருகூட்டப்படுகிறது.
டாடா சியாரா பாதுகாப்பு அம்சங்கள்:
பயணிகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை சியாரா உறுதி செய்துள்ளது. இதற்காக சியரா எஸ்யூவியின் அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+ வகைகளில் 22 பாதுகாப்பு அம்சங்களுடன் லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. இது 4Sight Blind Spot அம்சத்துடன் கூடிய 360° HD சரவுண்ட் வியூ சிஸ்டம், Mappls Auto மற்றும் Intelligent Speed Assist (ISA) உடன் உள்ளமைக்கப்பட்ட நேவிகேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நார்மல், வெட் மற்றும் ரஃப் என மூன்று டெரெயின் மோட்களும் உள்ளன. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ் மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய மாடல்களுடன் கடுமையாக போட்டியிடுகிறது.
டாடா சியாராவின் முழு விலைப்பட்டியல்





















