Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்
படுக்கை வசதி குறைவு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது விசாரணை நடத்தி, போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவித்தார்
![Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம் kovilpatti Government Hospital Issue 120 people under treatment but only 60 beds available TNN Kovilpatti Govt Hospital: சிகிச்சையில் 120 பேர்; இருப்பதோ 60 படுக்கை - கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் அவலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/28/ccec491d232d6298f7c99b8fd8769e931680006207380109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாய் கூட வழங்கவில்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய படுக்கை வசதி இருந்தும், அதனை செயல்படுத்த மருத்துவமனை நிர்வாகம் சுணக்கம் காட்டி வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவிலும். 500க்கும் மேற்ப்பட்டோர் உள் நோயாளிகள் பிரிவிலும் தங்கிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் போதி படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டில் 60 படுக்கை வசதி தான் உள்ளது.
ஆனால் 120 பேருக்கு மேலாக சிகிச்சைக்க வரும் நிலை உள்ளதால் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி கிடைக்காமல் தரையில் படுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலனவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படுக்கை கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தரையிலும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு அருகே இருக்கும் செட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வெயில், மழை என மாறி மாறி இயற்கை போக்குகாட்டி வருவதால் சிகிச்சை பெற வந்தவர்கள் பெட் கிடைக்கமால் அவதிப்பட்டு வருகின்றனர்
மழை பெய்தால் ஓரத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மருத்துவமனை உள்ளே செயல்பட்டு வந்த மகப்பேறு பிரிவு தற்போது புதியதாக கட்டப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்திய கட்டிடங்கள் காலியாக உள்ளது. பெட் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலியாக உள்ள கட்டித்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அங்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுத்து அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது தரையில் படுத்து இருக்கும் நோயாளிகளுக்கு பாய் கூட வழங்கவில்லை என்பதால், தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை விரித்து படுத்து தூங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, காலியாக இருக்கும் பழைய மகப்பேரு பிரிவு கட்டிடத்தில் சில பணிகள் செய்ய வேண்டியது இருப்பதால், விரைந்து செய்து அதில் உள்ள படுக்கைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த 5நாள்களுக்கு மேலாக போதிய படுக்கை வசதி இல்லமால் சிகிச்சை பெறுபவர்கள் அவதிப்பட்டு வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)