Prashant Kishor meets TVK Vijay | LEAK-ஆன ஆடியோ! ஸ்கெட்ச் போட்ட PK! ஜான் ஆரோக்கியசாமி OUT!
ஒரு உறையில் எப்போதுமே இரண்டு கத்திகள் இருக்க முடியாது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல் வியூக வகுப்பாளராக ஏற்கனவே ஜான் ஆரோக்யசாமி இருக்கும் நிலையில், இந்திய அளவில் தேர்தல் வியூக வகுப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற பிரசாந்த் கிஷோரை , தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தியிருக்கிறார். இது, ஆதவ் ஆர்ஜூனாவின் ஏற்பாடுதான் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. பிரசாத் கிசோரை, திடீரென விஜய் சந்திக்க காரணம் என்ன? ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலைகளா? ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ விவகாரம் காரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் அரசியல் வியூக வகுப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் ஜான் ஆரோக்கியசாமி. சமீபத்தில் இவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவருடன் உரையாடிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் விஜய் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்படும் புஸ்ஸி ஆனந்த் மீது, கடுமையான குற்றச்சாட்டுகளை ஜான் ஆரோக்கியசாமி வைத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட ஆதவ் அர்ஜூனா முயற்சிகள் மேற்கொண்டதற்கு உடனடி தடையாக அந்த கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இருவரையும் தாண்டி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவியை வாரி வழங்கியிருக்கிறார் விஜய். விஜய் வெளியிட்ட அறிவிப்பில் தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் இணைந்து செயல்படுவார் என்று குறிப்பிட்டிருந்தாலும் ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது என்பதற்கு இணங்க, ஆதவின் அரசியல் வியூகத்தில் அதே மாதிரியான வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில்தான், தேர்தல் வியூகங்களில் இந்திய அளவில் புகழ்பெற்ற , மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, ஸ்டாலின் என பலருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த கிஷோரை , இன்று தனது வீட்டில் விஜய் சந்தித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமே , ஆதவ் அர்ஜூனாவின் ஏற்பாடுதான் என்றும் கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் அரசியலுக்கு, ஆதவ் அர்ஜூனா நிதியுதவி அழிப்பதாக கூறப்படுகிறது. அதன் கைமாறாகத்தான், ஆதவ் அழைத்தவுடன் , விஜய்யை சந்திக்க வந்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பிரசாந்த் கிஷோர் நேரடியாக, விஜய்க்காக வியூகங்களில் வராவிட்டாலும், தனது அணியில் உள்ள சிலரை விஜய்க்காக அனுப்ப உள்ளாராம். அந்த அணிக்கு , ஆதவ் தலைமை வகிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , பிரசாந்த் கிஷோர் அணி உள்ளே வந்தால், ஜான் ஆரோக்கியசாமிக்கான இடம் என்ன? அல்லது பிரசாந்த் கிஷோர் -விஜய் இடையிலான சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பா? ஆதவ் திட்டம்தான் என்ன? விஜய்யின் அடுத்த திட்ட்ம்தான் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.





















