மேலும் அறிய

யூடியூபில் வீடியோ பார்த்து கூகுளில் லொக்கேஷன் தேடி இளைஞர் கடலில் குதித்து தற்கொலை 

வாழ்க்கையின் இருள் பக்கங்கள், த்ரில் தற்கொலைகள் அமானுசியங்கள் என தேடித்தேடி படிப்பதோடு அது சம்பந்தமாக கருத்துக்களையும் பதிவிடுவதோடு தன்னை ஒரு த்ரில்லர் கேரக்டராகவே பாவித்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த புத்தன்விளை பகுதியை சேர்ந்த ஹரிலால் மூர்த்தி, பிந்து என்ற தம்பதியரின் 21 வயது மூத்த மகன் மிதுன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு எஞ்சினியரிங் படித்து வருகிறார் தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தே ஆண் லைன் வகுப்பில் பயின்று வருகிறார். கடந்த 7 ஆம் தேதி காலை வீட்டில் இருந்து ஆன்லைன் தேர்வு எழுதிய மிதுன் தேர்வு விடை தாள்களை கோர்த்து கட்டுவதற்கு நூல் வாங்கி வருவதாக தாயிடம் 100-ரூ வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார் மாலை ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் தாய் பிந்து திருவட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
 
யூடியூபில் வீடியோ பார்த்து கூகுளில் லொக்கேஷன் தேடி இளைஞர் கடலில் குதித்து தற்கொலை 
 
புகாரின் பேரில் மிதுன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வீட்டில் விட்டு சென்று தாயாரிடம் விசாரணை நடத்தியதோடு செல்போனை ஆய்வு செய்தனர் அப்போது கிடைத்த தகவல் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது. சிறு வயதில் ஆரம்ப பள்ளி படிப்பை வெளிநாட்டில் முடித்த மிதுன் கவிதை, கட்டுரை, அமானுசிய கதைகள் போன்றவற்றில் நாட்டமுடையவராக இருந்துள்ளார் இணையதளங்களில் த்ரில் மரணங்கள், வாழ்க்கையின் இருள் பக்கங்கள், த்ரில் தற்கொலைகள் அமானுசியங்கள் என தேடித்தேடி படிப்பதோடு அது சம்பந்தமாக கருத்துக்களையும் பதிவிடுவதோடு தன்னை ஒரு த்ரில்லர் கேரக்டராகவே பாவித்து வந்துள்ளார்.
 
யூடியூபில் வீடியோ பார்த்து கூகுளில் லொக்கேஷன் தேடி இளைஞர் கடலில் குதித்து தற்கொலை  
 
தற்போது தனியறையில் தனிமையில் இணையத்தில் மூழ்கிய அவரை பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் செல்போனில் யூடியூப் பக்கத்தில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளவது எப்படி என்று பல வீடியோக்களை மிதுன் தேடி செய்து பார்த்ததோடு தன் ஊருக்கு அருகாமையிலேயே அதற்கு உகந்த இடங்கள் எவை என கூகுளிலும் தேடி பார்த்துள்ளார். தனது பெண் தோழியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால் எந்த மாதிரி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார் எங்கு சென்று தற்கொலை செய்யப் போகிறார் என்ற விபரங்கள் தெரியாத நிலையில் 
 
போலீசார் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை கழிந்த மூன்று நாட்களாக ஆய்வு செய்தனர் அப்போது தலையில் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்லும் மிதுன் திருவட்டார் அழகியமண்டபம் வழியாக சுமார் 25-கிலோ மீட்டர் பயணித்து குளச்சல் கடற்கரை பகுதிக்கு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து 10 ஆம் தேதி குளச்சல் கடற்கரை பகுதியில் நின்ற இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார் மிதுன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்
 
யூடியூபில் வீடியோ பார்த்து கூகுளில் லொக்கேஷன் தேடி இளைஞர் கடலில் குதித்து தற்கொலை 
 
இன்று காலை மீனவர்கள் உதவியுடன் படகில் குளச்சல் கடலுக்குள் சென்று பார்த்த போது தூண்டில் வளைவு கோர் லாக் கற்களுக்கிடையே சடலம் ஒன்று சிக்கியிருப்பதை கண்ட போலீசார் அந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு அடையாளம் கண்ட போது, அது மிதுன் உடல் என்பது தெரியவந்தது இதனையடுத்து மிதுன் தற்கொலை செய்து கொண்டதை உறுதியாக்கிய போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மாயமான வழக்கை குளச்சல் காவல் நிலையத்திற்கு மாற்றிய நிலையில் குளச்சல் கடல் காவல் நிலைய போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் உன்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க எவரி மேன் பார் கிம்செல்ப் என்று மிதுன் சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே வெளியிட்டிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. த்ரில்லராக வலம் வந்த எஞ்சினியரிங் மாணவர் த்ரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும் அவர்களை தற்காலிகம் ஆக்குவதும் நிரந்தரம் ஆக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது.
 
தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும் மாநில உதவி மையம் 104, சிநேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
பெற்றோர்களே உஷார்.. குட்டி தைல டப்பாவால் ஆபத்து..‌ போராடி காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Breaking News LIVE 18th NOV 2024: ஆம் ஆத்மியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Embed widget