மேலும் அறிய
Advertisement
கன்னியாகுமரி: அலையாத்தி காடுகளை பெருக்க 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன
கன்னியாகுமரி: இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காக்க இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் அலையாத்தி காடுகளை பெருக்க தமிழக அரசு சார்பில் நேற்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காக்க இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக கன்னியாகுமரி தான் அதிக அளவு வனப் பரப்பு கொண்ட மாவட்டம். வன பகுதிகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடல் அரிப்பைத் தடுத்து இயற்கை சூழலை உருவாக்கும் அலையாத்தி காடுகள் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி கழிமுகத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் ஏராளமான நண்ணீர் பறவைகள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துள்ளது. மேலும் கடல் அரிப்பு என்பது தடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த அலையாத்தி காடுகளை பெருக்க தமிழக அரசு சார்பில் இன்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு இந்த அலையாத்தி காடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் வண்ணம் அவர்களும் மரக்கன்றுகள் நட்டனர்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ”குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் இயற்கையாகவே ஏராளமான சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இதனை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் சீமை கருவேல மரம் அதிக அளவில் இருந்தது. அதனை எடுத்துவிட்டு முழுவதுமாக சதுப்பு நில காடுகள் உருவாக்க திட்டமிட்டு அதனை தற்போது செயல்படுத்தி வருகிறோம்.
சுமார் 70 ஏக்கர் கொண்ட சதுப்பு நிலத்தில் 40 சதவீதம் காடுகளை உருவாக்கி விட்டோம். எதிர்வரும் காலத்தில் சுமார் 10,000 கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும். குமரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் இயற்கை தடுப்பு அரணாக செயல்படும் அலையாத்தி காடுகளை உருவாக்க முடியும் என ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில் கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து கடற்கரை பகுதி மக்களை காப்பாற்ற இயற்கை தடுப்புச் சுவர் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா பொழுதுபோக்கு மேம்பாட்டு பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion