குரு உபதேசம் குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் பாராளுமன்ற திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் - பரசமய கோளரிநாத ஆதீனம்
தமிழகம் சாதாரணம் அல்ல, புண்ணிய பூமி என்பதை பிரதமர் நிரூபித்தது உள்ளார்.
![குரு உபதேசம் குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் பாராளுமன்ற திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் - பரசமய கோளரிநாத ஆதீனம் It is those who do not understand the teachings of the Guru who oppose the opening of Parliament says Parasamaya Kolarinatha Atheenam குரு உபதேசம் குறித்த புரிதல் இல்லாதவர்கள்தான் பாராளுமன்ற திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் - பரசமய கோளரிநாத ஆதீனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/06/ea5773a9d3744a2b48e576fc3ece0c571686056813081109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மற்றும் வடநாட்டு ஆன்மீக யாத்திரையில் கலந்து கொண்டு நெல்லை திரும்பிய பரசமய கோளரிநாத ஆதீனத்தின் 39 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தத்மனந்த சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு நெல்லை டவுன் பகுதி மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு கொழு காட்சி பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் ஆதீன மடத்தின் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரசமய கோளரிநாத ஆதினம் கூறும் பொழுது, "1400 ஆண்டுகள் பழமையான ஆதினம் இந்த ஆதினம். நமது ஆதினத்திற்கு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நம்மால் நினைத்து பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்டிடம். மிகப்பெரிய இடையூறுக்கு மத்தியில் தெய்வசக்தியால் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகளில் கட்டபட்டுள்ளது. தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை பிரதமர் தந்துள்ளார். தமிழ் ஆதினங்கள் முன்னிலையில் தற்போது செங்கோல் நிறுவபட்டுள்ளது. நேர்மையும், தொன்மையும் உடையதாக செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.
தமிழக ஆதினங்களுக்கு மரியாதை அளித்து அனைத்து வகையான ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து கொடுத்தது மத்திய அரசு. தமிழகம் சாதாரணம் அல்ல, புண்ணிய பூமி என்பதை பிரதமர் நிரூபித்தது உள்ளார். நவீன தொழில் நுட்பங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் திட்டமிடப்பட்டு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஆதினங்கள் மட்டுமே புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தமிழ் கலாச்சாரம் பழமையை எடுத்துரைக்கவே தமிழ் ஆதினங்கள் அழைக்கப்பட்டனர். தமிழ் மரபுப்படி செங்கோல் வழங்கப்பட்டதால் தான் தமிழ் ஆதினங்கள் அழைப்பு விடுக்கப்பட்டது. குருபரம்பரை பிரதமர் மதிக்கப்படுவதால் குருமகாசன்னிதானங்களுக்கு அழைக்கப்பட்டனர். ஆன்மிகம் மற்றும் குரு உபதேசம் குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் பாராளுமன்ற திறப்பு குறித்த எதிர்கருத்து தெரிவிக்கின்றனர். பாரத தேசம் ஆன்மீக நாடு ஆன்மீகத்தை மோடி போற்றுகிறார். திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை கீழ் இறக்குகின்றன. மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நமது ஜீவனம் தாமிரபரணி நதிக்கு நாடு முழுவதும் நல்ல பெயர் உள்ளது. அந்த நதியை காக்க வேண்டும் என்ற பொறுப்பு நம்மில் அனைவருக்கும் இருக்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து தாமிரபரணி நதியை பாதுகாப்பது தொடர்பான கோரிக்கையை முன் வைக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)