மேலும் அறிய
Advertisement
குமரி ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தால் ஹெல்மெட் அவசியம்
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரு சக்கர வாகனத்தில் வரும் அனைவரும் இன்று முதல் ஹெல்மெட் அணிய வேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையாக ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகளை குமரி மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து , அறிவுரைகளை கூறி தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகன்றனர்.இந்த நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று திடீர் சுற்றறிக்கை ஒன்றை அரசு அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழக அரசு உத்தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகக் இருந்து வருகிறது.
இருப்பினும் அதனை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு பணியாளர்களே அதனை கடைபிடிக்காமல் ஹெல்மெட் அணிவதில் அலட்சியம் காட்டுவது பல்வேறு நிகழ்வுகளில் நேரடியாகவும் காணப்படுவதாகவும், அனைத்து அரசுத்துறை பணியாளர்களும் இனிமேல் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அதன் மூலம் தனது உயிருக்கு மட்டுமல்லாது தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதில் பொது மக்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் .
மேலும் அந்த சுற்றறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே இருசக்கர வாகனத்தில் வரும் அனைத்து அரசு பணியாளர்களையும், பொதுமக்களையும் முறையாக கண்காணித்து இந்த உத்தரவினை மீறும், பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் அபராதம் விதிக்க காவல்துறைக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் பயணம் செய்யும் அரசு அதிகாரிகள் பொது மக்களை போலீசார் நுழைவாயில் தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாமல் உள்ளே வரும் நபர்களை திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion