மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி
![விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் - அமைச்சர் மனோ தங்கராஜ் DMK Minister replies to Annamalai that it is a personal choice of the Chief Minister Whether or not to wish Vinayagar Chaturthi TNN விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் - அமைச்சர் மனோ தங்கராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/02/d803bcb1a7c3d70a60d5bebd1caf80f51662098148559102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்றும், அண்ணாமலை மட்டும் தான் வருத்தப்படுகிறாரே தவிர வேறு யாரும் வருத்தப்படவில்லை எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை தமிழக தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்தார். அவர் பேட்டியளிக்கையில், “நான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். பாஜகவின் சனாதனதர்ம மனு நீதி படி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை IPS ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல். இந்த மண்ணில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை என்பது மறுக்கப்பட்டது மீண்டும் சனாதன ஆட்சி வந்தால் சட்டத்தின் ஆட்சி இருக்காது, அண்ணாமலை கூறிய கருத்து சரியானது தான். அவர் உண்மையை தான் பேசியுள்ளார்.
![விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் - அமைச்சர் மனோ தங்கராஜ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/02/26da21da369da6c1d6ce8bdf273766b41662098066972102_original.jpg)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார். ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவர் விருப்பம். இந்திய துணை கண்டத்தில் இருக்கும் அரசு, மதசார்பற்ற அரசு, மதங்களுக்கு பின்னால் அரசு செல்ல வேண்டிய தேவை இல்லை. தற்போதைய அரசு மத சார்பற்ற அரசு, எல்லோருக்குமான அரசாக இருந்து வருகிறது. தமிழர் பண்பாட்டு முறையில், எல்லாரும் வாழ்த்து சொல்லுகிறோம், ஆனால் முதல்வருக்கு விருப்பம் இருந்தால் சொல்லட்டும். தனிப்பட்ட விசயம், இதற்கு அண்ணாமலை மட்டும் தான் வருத்தப்படுகிறாரே தவிர வேறு யாரும் வருத்தப்படவில்லை என கூறினார்.
அஞ்சுகிராமத்தை அடுத்துள்ள ரஸ்தாகாடு கடற்கரையில் குளிப்பதற்காக கடலில் இறங்கிய திவாகர் என்ற பத்தாம் வகுப்பு மாணவனை ராட்சத அலை இழுத்து சென்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வட்டக் கோட்டையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் திவாகர்(15) கோயம்புத்தூரில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இரண்டு நாள் விடுமுறை காரணமாக ஊருக்கு வந்திருந்தார் திவாகர். இந்நிலையில் ரஸ்தா காடு கடற்கரைக்கு தனது தாய் மற்றும் தங்கையுடன் சென்றுள்ளார். அங்கு கடலை ரசித்தபடி நின்றவர்கள், கடலில் குளிப்பதற்காக திவாகர் கடலில் இறங்கியுள்ளார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவரை கடலில் இழுத்துச் சென்றது. தாய், தங்கை கண் முன்னே கடல் அலை இழுத்து சென்றதால் செய்வதறியாது வா வா என அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து கடற்கரையில் நின்ற பொதுமக்கள் அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுமம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடல் அலை இழுத்துச் சென்ற மாணவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாணவரின் உடல் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் உடல் கரை ஒதுங்கியது. அதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion