மேலும் அறிய

தூத்துக்குடியில் நாளை மெகா மருத்துவ முகாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

அவரோடு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்த ஆய்வில் கலந்து கொண்டார்.

நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்த இடங்களை மருத்துவம் மற்றும மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.  அவரோடு தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்த ஆய்வில் கலந்து கொண்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு, உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  தரைத்தளத்தில் ஆறு முதல் ஏழு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில் அங்குள்ள  கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 2682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 764 பேர் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  2565 நபர்கள் சளி உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குணமாகி வருகிறார்கள். இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து 190  நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட நான்கு மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் ஏரல், திருவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17  தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவமுகாம் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் தேவைப்பட்டால் மெகா மருத்துவ முகாம் நடத்தப்படும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 முதுநிலை  மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். மழை பாதித்த 4 மாவட்டங்களில் மருத்துவ கட்டிட கட்டமைப்பு மருந்துகள் என  315 இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இவை அனைத்தையும் கணக்கெடுத்து உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்

 ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் கூட அங்கே ஒரு சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. மருத்துவ பணிகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8,545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை முழு கட்டுப்பாட்டில் உள்ளது . கொரோனா பரவல் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. அதனையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தார். பின்னர் மனக்காவலம்பிள்ளை நகரில் நடந்து வரும் பொது மருத்துவ முகாமினை பார்வையிட்ட பின்னர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை சபாநாயகர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget