மேலும் அறிய

கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ பதிவு செய்த வழக்கு: வாக்குமூலம் அளித்த நண்பர்.. திகிலில் திலீப்

திலீபிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும். இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்தும் பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017ஆம் ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப், பல்சர் சுனி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனி இப்போதும் சிறையில் உள்ளார். அதேசமயம் நடிகர் திலீப் 74 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு, ஜாமினில் வெளியே வந்தார். நடிகையை கடத்தியதில் நேரடியாக தொடர்புடைய பல்சர் சுனியை தனக்கு தெரியாது என சாதித்து வந்தார் நடிகர் திலீப். திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் போலீசாருக்கு சிக்கவில்லை. நடிகை வழக்கில் இருந்து எப்படியும் தப்பித்துவிடலாம் என மனக்கணக்கு போட்டிருந்தார் திலீப். ஆனால் அவரது நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் ரூபத்தில் திலீபிற்கு எதிரான சாட்சிகள் உருவாகியுள்ளன. 2017ஆம் ஆண்டில் இயக்குநர் பாலசந்திரகுமார் திலீபிற்கு நண்பராகத்தான் இருந்துள்ளார். இப்போது திடீரென திலீபிற்கு எதிரியாக மாறியுள்ளார். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனது மனசாட்சி உறுத்துவதால் இதை வெளிப்படுத்துவதாக பாலசந்திரகுமார் கூறுகிறார். ஆனால், நடிகை தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்ததை அடுத்தே பாலசந்திரகுமார் திலீபிற்கு எதிராக திரும்பினார் எனவும் சொல்லப்படுகிறது.

கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ பதிவு செய்த வழக்கு: வாக்குமூலம் அளித்த நண்பர்.. திகிலில் திலீப்
பாலசந்திரகுமார் ஒரு தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதுதான் முதன் முதலாக திலீப் குறித்த சில தகவல்களை வெளியிட்டார். "பல்சர் சுனியை தனக்கு தெரியாது எனக்கூறித்தான் திலீப் ஜாமின் பெற்றார். ஆனால், திலீபும், பல்சர் சுனியும் ஒன்றாக அமர்ந்து பேசியதை நான் பார்த்திருக்கிறேன். திலீபின் வீட்டில் வைத்துதான் நான் அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தேன். நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ஒரு அதிகாரி திலீபிடம் கொண்டுவந்து கொடுத்தார். திலீப் அந்த வீடியோவை பார்த்தார்.

திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சமயத்தில் அவரது சகோதரன் அனூப், மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் எனக்கு போன் செய்து, பல்சர் சுனியுடனான நட்பு பற்றி வெளியே சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவருக்கு ஜாமின் கிடைக்காது எனக் கேட்டுக்கொண்டனர். ஆலுவா சிறையில் இருந்த திலீப் என்னை பார்க்க வேண்டும் என கூறியதாக அவரது சகோதரர் என்னிடம் சொன்னார். நான் சிறையில் சென்ற சமயத்தில் அங்கு திலீபிற்கு வி.ஐ.பி சலுகை கொடுக்கபப்ட்டிருந்தது. பல்சர் சுனியுடனான தொடர்புபற்றி வெளியே சொல்லக்கூடாது என அப்போதும் திலீப் என்னிடம் கேட்டுக்கொண்டார். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தன்னை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என திலீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து பேசினார்" என பல தகவல்களை வெளிப்படுத்தினார் பாலசந்திரகுமார்.

கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ பதிவு செய்த வழக்கு: வாக்குமூலம் அளித்த நண்பர்.. திகிலில் திலீப்
இதற்கிடையே அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் ஆலோசனை நடத்தியதாக திலீப் மீது கிரைம் பிரான்ச் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் முதல் குற்றவாளியாக கோபால கிருஷ்ணன் என்ற திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். வி.ஐ.பி எனக்கூறப்படும் ஒருவர் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் யார் என தெரியவில்லை. இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என திலீப் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த கோர்ட் 14 ஆம் தேதிவரை திலீபை கைது செய்ய தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பாலசந்திரகுமார் நேற்று முன் தினம் கிரைம் பிரான்ச் போலீஸாரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது 20 டிஜிட்டல் ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. திலீப் உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ ஒரு டேபில் ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். அதில் திலீப், திலீபின் சகோதரன் அனூப், மவியின் தம்பி உள்ளிட்டவர்கள் பேசும் ஆடியோ உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் ஜூடீசியல் மஜிஸ்திரேட் கோர்ட்டில் பாலசந்திரகுமார் ஆஜராகி 6.30 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலங்கள் 51 பக்கத்துக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.

கேரள நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ பதிவு செய்த வழக்கு: வாக்குமூலம் அளித்த நண்பர்.. திகிலில் திலீப்
திலீபிடம் அறிமுகம் ஆனது முதல் அனைத்து விஷயங்களையும் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகவும். இந்த விஷயங்களை வெளியே கூற காலதாமதம் ஆனதற்கான காரணம் குறித்தும் வாக்குமூலத்தில் கூறியதாக பாலச்சந்திரகுமார் தெரிவித்துள்ளார். வரும் 20 ஆம் தேதிக்கு முன் முதற்கட்ட விசாரணை அறிக்கை கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துவருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget