மேலும் அறிய
Advertisement
நாகர்கோவில்: இதை செய்ய முடியுமா என சவால் விட்ட சர்க்கஸ் வீரர்....அசால்ட்டாக செய்த கல்லூரி மாணவர்..!
இந்த சர்க்கஸில் சாகச வீரர் கூட்டத்திலிருந்து யாராவது வந்து தூக்க முடியுமா என சவால் விட்ட நிலையில் கண்ணன் என்பவர் இந்த சவாலை ஏற்று அவரது சவாலை முறியடித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தற்போது இந்தியாவிலேயே மிகப் பழமையான சர்க்கஸ்களில் ஒன்றான ஜம்போ சர்க்கஸ் நடைபெற்று வருகிறது. இந்த சர்க்கஸில் பல்வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக சாகச நிகழ்ச்சி , கோமாளிகளின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிருகங்களின் சாகசங்கள், ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் இந்த சர்க்கஸில் நடைபெறுகிறது. சிறந்த பயிற்சி பெற்ற சர்க்கஸ் கலைஞர்களால் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சர்க்கஸ் காட்சியில் சுமார் 80 கிலோ எடை கொண்ட கெட்டில் பெல் எனப்படும் வித்தியாசமான உடற்பயிற்சி கருவியை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சாகச வீரர் ஒருவர் தனது கைகளாலும், பல்லால் கடித்து தூக்கி சாதனை நிகழ்த்தி வந்தார். திடீரென அந்த காட்சியின் போது இந்த ஊரில் இந்த கருவியை தூக்குவதற்கு யாராவது உள்ளீர்களா என சவால் விடுத்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே ஜேம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த பிரேவ் மேன் ஹார்ட் என்ற கல்லூரி மாணவர் தனது குடும்பத்துடன் சர்க்கஸ் பார்க்க சென்றிருந்தார். நீண்ட நேரமாக சர்க்கஸ் வீரர் சவால் விடுத்ததை பொறுக்க முடியாமல் சவாலை ஏற்ற மாணவர் முதல் முயற்சியிலேயே அந்த 80 கிலோ கருவியை தூக்கி அசத்தினார் இதனை கண்ட மக்கள் கைதட்டி பாராட்டினர்.
இதுகுறித்து மாணவரிடம் பேசினோம் அவர் கூறுகையில், ”சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மற்றும் பழுதூக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நான், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்று வருகிறேன். விடுமுறை நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் நான் எனது ஃப்ரீ டைமில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில்தான் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்று வரும் சர்க்கஸிற்கு நண்பருடன் சென்றோம். அங்க திடீரென கெட்டில் பெல்லை தூக்கி சாதனை செய்து கொண்டிருந்த ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் கூட்டத்திலிருந்து யாராவது வந்து தூக்க முடியுமா?, யாருக்காவது தைரியம் உள்ளதா? என நீண்ட நேரம் சவால் விட்டுக் கொண்டே இருந்தார். அப்போதுதான் எனக்கு அவர் சாதனையை முறியடிக்க வேண்டும் என தோன்றியது ஒரு வெறியில் சவாலை ஏற்று பின் உள்ளே சென்று அந்த கருவியை தூக்கினேன். சவாலை முறியடித்த எனக்கு ஆப்பிரிக்க வீரர் மட்டுமல்ல அங்கு கூடியிருந்த அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்” எனக் கூறினார்.
ஏற்கனவே இந்த சர்க்கஸில் சாகச வீரர் கூட்டத்திலிருந்து யாராவது வந்து தூக்க முடியுமா என சவால் விட்ட நிலையில், கண்ணன் என்பவர் இந்த சவாலை ஏற்று அவரது சவாலை முறியடித்த நிலையில், தற்போது மீண்டும் சர்க்கஸ் வீரரின் சவாலை அசால்ட்டாக மாணவர் ஒருவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை மாணவருடன் வந்த நண்பர்கள் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
அரசியல்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion