மேலும் அறிய

நெருங்கும் தேர்தல்..எதிரிகளை செயலிழக்க செய்யும் சத்ரு சம்ஹார பூஜை செய்த அமைச்சர் எல்.முருகன்

திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள், 11 அமைச்சர்கள் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. முதலில் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ள சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில், எதிரிகளை செயலிழக்க செய்யும் சத்ரு சம்ஹார பூஜை மற்றும் யாகம் நடத்தி வழிபட்டார். அதனைத்தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் சிறப்பு வழிபாடு செய்தார்.

நெருங்கும் தேர்தல்..எதிரிகளை செயலிழக்க செய்யும் சத்ரு சம்ஹார பூஜை செய்த அமைச்சர் எல்.முருகன்

அதனைத்தொடர்ந்து கோயில் விருந்தினர் மாளிகையில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உலகநாடுகளில் இந்திய விண்வெளித்துறையில் சரித்திரம் படைத்து வருகிறது. தென்தமிழகத்தில் தொழில்துறையில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.986 கோடி செலவில் குலசேரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ரூ. 11 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேப்படுத்த சாலைவசதி, விமான வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் வருகை தமிழ்நாட்டின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் பிரதமரின் மீது மிகப்பெரிய அன்பை வைத்திருக்கிறார்கள். பாஜக சார்பில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்தி 4 எம்எல்ஏக்களை கொடுத்தோம் அதேபோல என் மண் என் மக்கள் யாத்திரை பலனாக புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று பார்லிமென்ட் செல்வார்கள். பாஜக தமிழகத்தில் வீரனாகவும் தளபதியாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இளைஞர்கள், பொதுமக்கள் பாஜகவை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை நாட்டிற்காக உழைத்த தலைவர்கள். அதனால் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். தற்போது பாஜகவிற்கு 30 சதவீத வாக்குகள் உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 60 நாட்கள் உள்ளது. வரக்கூடிய தேர்தல் வரலாற்றை புரட்டி போடும் அளவில் அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் பாஜக தடம் பதிக்கும். இத்தேர்தலில் கூட்டணி பற்றி தேசிய தலைமை பேசி வருகிறது .

நெருங்கும் தேர்தல்..எதிரிகளை செயலிழக்க செய்யும் சத்ரு சம்ஹார பூஜை செய்த அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள், 11 அமைச்சர்கள் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. முதலில் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஊழலை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக மீனவர்கள் படகுகள் இலங்கையில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் எங்களை சந்தித்தனர். பிரச்சனை தொடர்பாக இருநாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களும் விரைவில் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது. கச்சத்தீவை தாரைவார்த்தது திமுகவும் காங்கிரசும் தான் அரசியலுக்காக அதை அவர்கள் பேசி வருகிறார்கள். ஆழ்கடல் மீன்பிடித்தொழிலை ஊக்குவிப்பதற்கு 60 % மானியம் கொடுத்து வருகிறோம். மீனவர்களை ஊக்கப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 38 ஆயிரத்து 500 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடந்த இரு ஆண்டுகளில் மீன்வளத்துறைக்கு மட்டும் ரூ.1800 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட குலசேகரப் பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிகழ்ச்சிக்கு திமுக சார்பில் கொடுத்து விளம்பரத்தி சீனா கொடி இடம்பெற்ற தொடர்பாக அவர்கள் நியாயப்படுத்த கூடாது. ராக்கெட் தளம் பாரத தேசத்தின் புகழை மட்டுமே கூறவேண்டும்.. அது தேசவிரோத செயல். இதற்காக பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

நெருங்கும் தேர்தல்..எதிரிகளை செயலிழக்க செய்யும் சத்ரு சம்ஹார பூஜை செய்த அமைச்சர் எல்.முருகன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
IPL KKR vs RR: எடுபடாத RR பவுலிங்! போற போக்கில் ஜெயிச்ச கொல்கத்தா! ஜஸ்டில் மிஸ்ஸான டி காக் சதம்!
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
Coimbatore Shutdown: கோவையில் மின்தடையா? (28.03.2025 ): மின் வாரியம் தெரிவித்தது என்ன?
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
Embed widget