அதிக சரள் மண் அள்ளியதாக அபராதம் விதிக்கப்பட்ட குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சோகம்
இந்த குளத்தில் இருந்து அதிக அளவு சரள் மண் அள்ளிவிட்டதாக அள்ளியவருக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்த நிகழ்வுகள் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கி ராஜா ஆகிய குழந்தைகள் குளத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி மீனா இவர்களுக்கு 13- வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் சந்தியா என்ற பெண் குழந்தையும் 10- வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண் குழந்தையும் 7- வயதில் இரண்டாம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மூன்று குழந்தைகளும் தங்கள் உறவினர்களுடன் பேரூரனியில் அமைந்துள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். இதில் உறவினர்களுக்கு தெரியாமல் குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று குழந்தைகளான சந்தியா, கிருஷ்ணவேணி, இசக்கி ராஜா ஆகியோர் குளத்தில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மூன்று குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த குளத்தில் இருந்து அதிக அளவு சரள் மண் அள்ளிவிட்டதாக அள்ளியவருக்கு அரசு அதிகாரிகள் அபராதம் விதித்த நிகழ்வுகள் சமீபத்தில் நடந்ததாக சொல்லப்படுகிறது.