தீபாவளி விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் விடுமுறை!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து அரசு விடுமுறையானது இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே ஆயூத பூஜை, காந்தி ஜெயந்தி என விடுமுறை கிடைத்தது. மேலும் காலாண்டு விடுமுறையும் தொடர்ந்து வந்ததால் மாணவர்கள் உட்பட பலர் சுற்றுலா செல்வது போன்ற வேலைகளில் இருந்து வந்தனர். இந்த நிலையில் அடுத்தாக தீபாவளியையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
அக்டோபர் 18 சனிக்கிழமை, 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி விடுமுறை, அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் வசதிக்காக தமிழகத்தில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. எனவே இப்போதே சொந்த ஊரில் சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் கந்தசஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா வரும் அக்.22ம் தேதி தொடங்கி அக்.28ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்.27ம் தேதி மாலை 4 மணிக்கு சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2025ம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள், பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.11.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















