உயிர்களை பறித்த அதிவேகம்.. வயக்காட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள் உயிரிழந்த சோகம்
வயல் வேலைக்கு வேலையாட்களை லோடு ஆட்டோவில் ஏற்றி செல்லும் பொழுது லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு.
வயல் வேலைக்கு வேலையாட்களை லோடு ஆட்டோவில் ஏற்றி செல்லும் பொழுது லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வயல் வேலைக்கு வேலையாட்களை லோடு ஆட்டோவில் ஏற்றி செல்லும் பொழுது லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பெண்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் இருந்து சுரண்டையை அடுத்துள்ள ஆணைகுளம் பகுதிக்கு வயல் வேலைக்காக சுமார் 15 பெண்கள் லோடு ஆட்டோவில் இன்று காலையில் சென்றுள்ளனர். லோடு ஆட்டோவை கீழச்சுரண்டையைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது வாடியூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது வளைவில் லோடு ஆட்டோவை தேவேந்திரன் திருப்ப முயன்றுள்ளார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்தது.
லோடு ஆட்டோவில் பயணித்த வேலை ஆட்களான பெண்கள் 15 பேரும் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்டனர், பெண்கள் அலறல் சத்தத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் சம்பவம் அறிந்து விரைந்த சுரண்டை போலீசார் காயமடைந்தவர்களை ஒவ்வொருவராக மீட்ட நிலையில் இதில் திருச்சிற்றம்பலம் கிராமம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர்களான ஜானகி (52), வள்ளியம்மாள்( 60), பிச்சி (60) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு காயமடைந்த 12 பெண்களும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லோடு ஆட்டோவை ஓட்டி வந்த தேவேந்திரனிடம் சுரண்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சிறிய லோடு ஆட்டோவில் அதிக வேலையாட்களை ஏற்றியதோடு அதி விரைவாக சென்று வளைவில் திரும்பும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் லோடு ஆட்டோ கலந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.