10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி மீன் அமிலத்தை கலந்து தெளித்தால் போதுங்க - அதிக மகசூல் உறுதி என்கிறார் ஆசிரியர்
கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார்.
![10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி மீன் அமிலத்தை கலந்து தெளித்தால் போதுங்க - அதிக மகசூல் உறுதி என்கிறார் ஆசிரியர் Government School teacher says that mixing 50 ml of fish acid in 10 liters of water and spraying will ensure high yield - TNN 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி மீன் அமிலத்தை கலந்து தெளித்தால் போதுங்க - அதிக மகசூல் உறுதி என்கிறார் ஆசிரியர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/03/75a18dde7dc41aae92dbba1c0ed42c3a1725337981409571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மீன் அமிலம் 50 மில்லி.. தண்ணீர் 10 லிட்டர் கலவையை தெளித்தால் போதுங்க அதிக மகசூல் உறுதி என்கிறார் தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது அரசு பள்ளி ஆசிாியர் சக்திவேல்க்கு விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற்ற சிறந்த பசுமை முதன்மையாளர் விருதுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிாியர் சக்திவேல் உள்பட 7 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த முதன்மையாளர் தேர்வு நடைபெற்றது. மீன் கழிவுகளில் இருந்து பதப்படுத்தப்பட்டு திரவ வடிவத்தில் எடுக்கப்பட்ட மீன் அமீலத்தில் 50மிலி எடுத்து அதோடு 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளின் மீது தௌித்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்பதை தன்னுடைய தோட்டத்தில் பாிசோதனை நடத்தி வெற்றி கண்டதோடு, நிறுத்திவிடாமல் அந்த மீன் அமிலங்களை பிற இடங்களில் நடப்படும், மரக்கன்றுக்களுக்கும் பசுமை பூங்காக்களுக்கும் தெளிக்கப்பட்டு வருகிறது என்பது புதுமையான பசுமை தயாாிப்பாகும்.
மேலும் வருடந்தோறும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வரை ஈஷா மையத்தோடு இணைத்து கருங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சாயத்தை சார்ந்த கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார். இளம் பருவத்தை சார்ந்த மாணவர்கள் தனது செல்போனில் பாா்த்து பொழுதை போக்காமலும், தன்னுடைய வாழ்க்கையை இழக்காமலும், இருக்கும் பொருட்டு தனது விவசாய பெற்றோரின் நிலைமையினை புாிந்து கொள்ளும் வகையில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள கிராமங்களில் எல்லையில் உள்ள விவசாய நிலங்களோடு அழைத்து செல்லும் இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அது போல் கருங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மண்ணில் புதைத்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருந்த எண்ணற்ற நெகிழி கழிவுகளை கண்டெடுத்து அதனை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் தான் வேலைப்பாா்க்கும் கருங்குளம் அரசு பள்ளியில் பசுமை பூங்கா அமைத்து அதில் மருத்துவ குணம் நிறைந்த நித்யகல்யாணி செடி, துதுவளை, கண்டகத்தாி, நொச்சி, கற்பூரவள்ளி, மணத்தக்காளி, மருதாணி, செடிகளும் காய் மற்றும் பழத்தோட்டம் அமைத்து பாரமாித்து வருகிறார். இவாின் சேவையை பாராட்டி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாாியம் சாா்பில் பசுமை முதன்மையாளர் விருது ஆசிாியர் சக்திவேல்க்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் இசக்கியம்மாள், சான்றிதழள் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் உடனிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)