மேலும் அறிய

தூத்துக்குடி: பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. இதிலிருந்து தொழிலாளர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி நாசரேத் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி: பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

நாசரேத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் நாசரேத் அருகே குறிப்பான்குளத்தை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் பேன்ஸி ரகப்பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு கட்டிடத்தில் நாசரேத் அருகே அரசர்குளத்தைச் சேர்ந்த கள்ளவாண்டான் மகன் முத்துகண்ணன்(21), கமுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் விஜய்(25), புளியங்குளத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வம்(26), செம்பூரைச் சேர்ந்த சுந்தரம் மகன் பிரசாந்த்(26), சின்னமதிகூடலைச் சேர்ந்த செந்தூர்கனி, முத்துமாரி ஆகிய 6 தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர். 

தூத்துக்குடி: பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

இவர்கள் இருந்த  அறைக்கு அருகே உள்ள அறையில்  திடீரென பட்டாசுகள் வெடித்தன. இதில் இருந்த வந்த தீப்பொறிகள் விழுந்து, தொழிலாளர்கள் பணியாற்றிய அறையில் இருந்த பட்டாசுகளும் வெடிக்க தொடங்கின. இதிலிருந்து தொழிலாளர்கள்  வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில், அறையில் பணியில் இருந்து முத்துகண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வம், பிரசாந்த், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் காயமடைந்தனர்.தூத்துக்குடி: பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

தகவல் அறிந்து, நாசரேத் போலீஸாரும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகள் அதிகமாக இருந்ததால், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்தன. இதில், காயமடைந்த பிரசாந்த், செல்வம் ஆகியோர் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், செந்தூர்கனி, முத்துமாரி ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த விஜய், முத்துகண்ணன் ஆகியோர் சடலங்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: பட்டாசு ஆலை விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசாத், செல்வம் ஆகியோருக்கு 90 முதல் 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், உயிர் பிழைத்தல் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராம்குமார் என்பவரை போலிசார் கைது செய்து உள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Embed widget