மேலும் அறிய
திருவாரூரில் தொடர் கனமழை... விவசாயிகள் மகிழ்ச்சி...வியாபாரிகள் வேதனை
மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

திருவாரூரில் மழை
தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், பேரளம், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நீடாமங்கலம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமானது முதல் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 6.6 சென்டிமீட்டர் மழை, நீடாமங்கலத்தில் 5.4 சென்டிமீட்டர் மழை, திருவாரூரில் 3.3 சென்டிமீட்டர் மழை, குடவாசலில் 2.3 சென்டிமீட்டர் மழை, மாவட்டத்தில் மொத்தமாக 22.8 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ விடுமுறை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 40 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் உரம் அடிக்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் இருந்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக தற்பொழுது உரம் அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இந்த மழை என்பது விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் மழை நீரை முழுவதுமாக சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வைத்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகளின் தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு கடன் வாங்கி தற்போது ஆடை வியாபாரம் மற்றும் பழங்கள் வியாபாரம் உள்ளிட்ட தொழில்களை நடத்திவரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை நாங்கள் சந்தித்து வருகிறோம் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பது தெரியாமல் தவித்து வருகிறோம் தொடர்ந்து இந்த மழை பெய்தால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை தரக்கூடிய ஒரு பண்டிகையாக அமைந்து விடும் எனவும் சாலையோர வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இறுதி கட்ட விற்பனை தான் எங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தரக்கூடிய சூழ்நிலை இருந்து வரும் நிலையில் தற்போது பெய்து வரும் மலை நீடித்தால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் சாலையோர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion