மேலும் அறிய

வீடு கட்டி தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

30 லட்சத்து ஆயிரம் ரூபாயும் மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாயும் என மொத்தம் 40 லட்சத்து  லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து 30 லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வீடு கட்டி தராத குரோம்பேட்டையை சேர்ந்த அமர் பிரகாஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பொதக்குடி கமாலியத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹிதயத்துல்லா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது மனைவி நஷீரா பேகம் கடந்த 04.06.2019 அன்று குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் ரோடு நேரு நகர் பகுதியில் உள்ள அமர் பிரகாஷ் டெவலப்பர்ஸ் என்கிற தனியார் நிறுவனத்துடன் திரு முடிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டுவதற்கு 31 லட்சத்து 72,946 ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் நசீரா பேகத்தின் அகர பொதக்குடி இந்தியன் வங்கி கிளை சேமிப்பு கணக்கில் இருந்து காசோலை மூலம் அமர் பிரகாஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு காசோலை மூலம் 16.05.2023 அன்று 10 லட்சத்து ஆயிரம் ரூபாயும் 18.05.2019 அன்று 5 லட்ச ரூபாயும் 29.05.2019 அன்று 5 லட்சம் ரூபாயும் 31.07.2019 அன்று 10 லட்ச ரூபாயும் என மொத்தம் நான்கு தவணையாக முப்பது லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குள் தனியார் நிறுவனம் நசீரா பேகத்திற்கு வீட்டை ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வீடு கட்டி தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
 
இதனையடுத்து நசீரா பேகம் கடந்த 01.09.2023 அன்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்  ஆணையத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு கட்டி தராத அமர் பிரகாஷ் டெவலப்பர்ஸ் தனியார் நிறுவனம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் ஆணையத் தலைவர் சேகர் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு  புகார்தாரர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் எதிர் தரப்பினருடன் முறையாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டதும்  பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய காலத்தில் எதிர் தரப்பினர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கட்டி தராததும் புகார்தாரர் எதிர் தரப்பினருக்கு நான்கு தவணையாக வங்கி கணக்கு மூலம் 30 லட்சத்து 1000 ரூபாய் பணம் செலுத்தியதும் ஆணையத்திற்கு தெரிய வருகிறது.

வீடு கட்டி தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
 
எனவே புகார்தாரர் கோருகின்ற பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கதாகும். எனவே அமர் பிரகாஷ் டெவலப்பர்ஸ் நிறுவனம் வீடு கட்டி தருவதற்கு பெற்ற  தொகையான 30 லட்சத்து ஆயிரம் ரூபாயும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாயும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயும் என மொத்தம் 40 லட்சத்து  லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் அமர்பிரகாஷ் நிறுவனத்தைச் சேர்ந்த பாபு பிரகாஷ் கொடுக்க வேண்டுமென அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. திருவாரூரில் இயங்கி வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அதிரடி தீர்ப்புகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் பயிர் காப்பீடு தொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக நிவாரணம் மற்றும் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைத்தது. அது மட்டுமன்றி புகழ்பெற்ற தனியார் பர்னிச்சர் நிறுவனங்கள் மற்றும் அவர்களிடம் வாங்கக்கூடிய பொருட்கள் பழுதடைந்தால் அதற்கு உரிய பதிலளிக்காமல் புகார்தாரர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது அதற்கு உடனடி தீர்வு உள்ளிட்ட பல்வேறு அதிரடி தீர்ப்புகள் மாவட்ட நுகர்வோர் குறைவீர் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆகையால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி தங்களுடைய புகார்களை அங்கு தெரிவித்து அதற்கு உரிய நஷ்ட ஈடை பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்கவுண்டர் சரியா? மோதிக்கொள்ளும் ரஜினி, அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் டீசர்!
மாஸாக ரஜினி.. கிளாசான அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் திரைப்படத்தின் டீசர்!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SS Hyderabad Biryani News | ”கெட்டுப்போன சிக்கன்” SS ஹைதராபாத்-க்கு பூட்டு..சிகிச்சையில் 35 பேர்!Tirupati laddu | BEEF, PORK கொழுப்பு..திருப்பதி லட்டு NON-VEG!ஷாக்கில் பக்தர்கள்EPS vs SP Velumani | நான் அடிச்சா தாங்கமாட்ட.. அசராமல் அடிக்கும் எடப்பாடி! SP வேலுமணிக்கு WARNING..Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்கவுண்டர் சரியா? மோதிக்கொள்ளும் ரஜினி, அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் டீசர்!
மாஸாக ரஜினி.. கிளாசான அமிதாப் பச்சன்.. வெளியானது வேட்டையன் திரைப்படத்தின் டீசர்!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Nandhan Movie Review : அதிகாரம் வாழ்வதற்கா? ஆள்வதற்கா? சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்பட விமர்சனம்
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
Lubber Pandhu Review : சிக்ஸரா? டக் அவுட்டா? ஹரிஷ் கல்யாண் Vs அட்டகத்தி தினேஷின் லப்பர் பந்து - விமர்சனம் இதோ..!
TN Weather: அடுத்த இரு தினங்களுக்கு அதிகரிக்கும் வெயில்.! மழையும் இருக்கு .! வானிலை மையம் தெரிவித்தது என்ன.?
அடுத்த இரு தினங்களுக்கு அதிகரிக்கும் வெயில்.! மழையும் இருக்கு .! வானிலை மையம் தெரிவித்தது என்ன.?
Udhayanidhi - Rajini : ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
ஷூட்டிங் முடிந்து வந்த ரஜினியிடம் இந்தக் கேள்வியா..எனக்கே அதிர்ச்சி.. அமைச்சர் உதயநிதி பேச்சு
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
Breaking News LIVE, 20 Sep : டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேச அணி
"நெய்யில் அதிக கலப்படம்" திருப்பதி லட்டு விவகாரம்.. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பகீர்!
Embed widget