பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க காவிரி துலாக்கட்டத்தில் வானதி சீனிவாசன் நீராடி வழிபாடு
காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி அன்னைக்கு ஆரத்தி எடுத்து நாட்டு மக்கள் நலமுடன் வாழவும், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு இருக்கவும் பிரார்த்தனை - வானதி சீனிவாசன்
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் 339 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். அதன் காணொலி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதை பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதினத்தில் 24 ஆவது குருமகா சன்னிதானத்துடன் இணைந்து பார்வையிட வருகை தந்துள்ளார்.
Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா?
இதற்காக இன்று காலை அவர் மயிலாடுதுறைக்கு வந்தவர், மயிலாடுதுறையில் கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஐதீக வரலாற்றைக் கொண்ட, காசிக்கு இணையான மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வானதி சீனிவாசன் அவரது கணவர் சீனிவாசனுடன் புனித நீராடினார். தொடர்ந்து காவிரிக்கு மகா ஆரத்தி எடுத்து வழிபாடு மேற்கொண்டார். காவேரி துலாக் கட்டத்தில் கடந்த ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடினால் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடி கிடைக்கும் முழு பலன் இந்த ஒரு மாத காலத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் இன்று தமிழ் காப்பாற்றப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதற்கு மிக முக்கிய காரணங்கள் ஆதீனங்களின் சிறப்பான பணிகளே ஆகும். பழங்காலத்தில் வித்வான்களை ஊக்குவித்து, தமிழ் சுவடிகளை கண்டறிந்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கு ஆதீனங்கள் மிகச்சிறந்த பணிகளை செய்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் மரியாதை செய்வதற்காக இன்றைய தினத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஆதீனங்களை பார்க்க செல்கிறோம்.
இந்தியில் வெளியான கோவை தெற்கு வாக்காளர் பட்டியல்: கியாரே... செட்டிங்கா...!
நடிகர் கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம்… பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!
இன்று காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி அன்னைக்கு ஆரத்தி எடுத்து நாட்டு மக்கள் நலமுடன் வாழவும், பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளோடு இருக்கவும் பிரார்த்தனை செய்தோம் என்றார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நடனக்கலைஞர் ஜாகீர் உசேன் வெளியேற்றம் - ரங்கராஜன் நரசிம்மன் மீது கோயில் நிர்வாகம் புகார்