மேலும் அறிய
Advertisement
அரசு பள்ளி மாணவியை குத்து விளக்கு ஏற்ற சொன்ன எம்எல்ஏ; கொரடாச்சேரியில் கட்டிட திறப்பு விழாவில் சுவாரஸ்யம்
மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சாம்பாரில் என்னென்ன காய்கறிகள் இருந்தது என்பது குறித்து கேட்டதற்கு சௌசௌ, வெங்காயம், பச்சை மிளகாய் என்று மாணவிகள் கூறினார்கள்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட கொரடாச்சேரி சிவன் கோவில் தெருவில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனை மணி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயபாஸ்கர், நீடாமங்கலம் வட்டாட்சியர் தேவேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வந்தபோது அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அவர்களை சந்திப்பதற்காக அங்கு காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சாம்பாரில் என்னென்ன காய்கறிகள் இருந்தது என்பது குறித்து கேட்டதற்கு சௌசௌ வெங்காயம், பச்சை மிளகாய் என்று மாணவிகள் கூறினார்கள். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்த ஆசிரியையிடம் நன்றாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல என்று கேட்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை அரசு பள்ளி மாணவி ஒருவரை அழைத்து சட்ட மன்ற உறுப்பினர் ஏற்ற வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் குத்து விளக்கை ஏற்றி வைத்தனர். இதேபோன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்து இருந்ததுள்ளது. இதனை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21 லட்சம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டப்பட்டது. இதனை இன்று முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றினார்
மேலும் அதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது இதனை முன்னாள் அமைச்சர் காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட கமலாலலய குளக்கரை அருகில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். மேலும் திருவாரூர் வட்டத்திற்கு உட்பட்ட குண்ணீயூர் பகுதியில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தூண்டி கலைவாணன் வெட்டி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion