Thiruvarur : கொட்டித் தீர்த்த கனமழை..! மழைநீரில் மூழ்கிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்..! வேதனையில் விவசாயிகள்..
விவசாய நிலம் முழுவதும் தேங்கி இருந்தது இந்த மழை நீரை வடிய வைக்கும் படியில் தனி ஒரு ஆளாக கருப்பையன் என்கிற விவசாயி மழை நீரை முற்றிலுமாக வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காவேரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குழுவை சம்பா தாளடி என மூன்று கோபம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் உரிய நேரத்தில் பருவமழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போகும் சாகுபடி என்பது ஒருபோதும் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மேட்டூர் அணையிலிருந்து மே 24ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் என்பது 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 517 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தாளடி நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இதில் பெரும்பாலும் விவசாயிகள் நேரடி விதைப்பு முறையில் விதை விதைத்துள்ளனர்.
இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்து நான்கு நாட்களாக கன மழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாளடி நெற்பயிர் 20000 ஏக்கர் பரப்பளவில் தெளித்து 20 நாட்களே ஆன பயிர்கள் வயலில் மழைநீர் தேங்கி உள்ளதால் அழுகி பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக பேரளம் கூத்தாநல்லூர் விக்கிரபாண்டியம் கோட்டூர் இருள்நீக்கி திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாளடி நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடியில் சன்ன ரகம் விதைத்ததில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் கனமழையால் மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளது மேலும் இரண்டு நாட்கள் மழை நீடித்தால் பாதிப்பு என்பது மேலும் அதிகரிக்க கூடும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்து வரும் நிலையில் விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாக்குடி கிராமத்தில் தாளடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய நிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை என்பது விவசாய நிலம் முழுவதும் தேங்கி இருந்தது இந்த மழை நீரை வடிய வைக்கும் படியில் தனி ஒரு ஆளாக கருப்பையன் என்கிற விவசாயி மழை நீரை முற்றிலுமாக வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தாமாக முன்வந்து வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து சிறுகுறி வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி மழைநீர் தேங்காாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.