மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்!! விவரம்!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 48 ஆயிரத்து 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 534 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து கொரோரனா தொற்று ஒருவருக்குக் கூட இல்லை.

இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா நான்காம் அலை வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா குறித்த அச்சம் என்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா உயரிழப்பு என்பதும் மிகையாக இருந்தது. பல நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குகளை விதித்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில்  கொரோனா தொற்று வேகம் மிக அதிவேகமாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதமாக கொரோனா தொற்று வேகம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக  திருவாரூர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று பாதித்தவர் ஒருவர் கூட இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்!! விவரம்!

இந்தியாவில் சமீபத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலாக பரவி வந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது கட்டுக்குள் வைக்கப்பட்டுருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தற்பொழுது நான்காம் அலை பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது அதேநேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து பொது மக்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 48 ஆயிரத்து 9 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 534 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 3 நபர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை 472 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1080 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 1 நபருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்!! விவரம்!
தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேலும் நடமாடும் மருத்துவமனை என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி என்பது முக்கியமான ஒரு ஆயுதமாகும். மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை மாவட்டம் முழுவதும் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மொத்தம் 9 லட்சத்து 200 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 14 ஆயிரத்தி 174 நபர்களுக்கும்,பூஸ்டர் தடுப்பூசி 5676 நபர்களுக்கும் என ஒட்டுமொத்தமாக 16 லட்சத்து 20 ஆயிரத்து 90 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்ட இல்லத்தரசிகள் அதிர்ச்சி... ஒரே மாதத்தில் கடலைப் பருப்பு கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மல்லிப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகப் புகார்! தஞ்சாவூர் காவல் ஆய்வாளர் கைது; அக்.23 வரை நீதிமன்றக் காவல்!
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு
தஞ்சாவூர் மாநகராட்சி அதிரடி... பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பன்றிகள் பிடிப்பு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget