மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக சாகுபடி பணிகள் தொடங்கிய நாட்களிலிருந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார்கள்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் என்பது கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூடியுள்ளது. இந்த செயலுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் அறுவடை பணிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியுள்ளது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும். ஆகையால் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று விட்டு அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் உடனடியாக மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
வேலைவாய்ப்பு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion