கொடைக்கானல் பழங்குடியினர் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து தந்த தஞ்சாவூர் சதீஷ்குமார் பான்சாலே
தமிழகத்தில் வீடுகள் கட்டித் தருவது, மருத்துவம், கல்வி, பழங்குடியினர் நலன், வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பல சமூக நலத்திட்டங்களை சதீஷ்குமார் பான்சாலே முன்னெடுத்து வருகிறார்.

தஞ்சாவூர்: கொடைக்கானல் பழங்குடியினர் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தந்து அனைவரின் பாராட்டுக்களை குவித்து வருகிறார் தஞ்சாவூர் மராட்டா அரச குலத்தை சேர்ந்த சதீஷ்குமார் பான்சாலே. இவரது மனித நேய சேவைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மராட்டா அரச குலத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் பான்சாலே. மனித நேயத்துடன் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து இயலாதவர்களுக்கு தன்னால் இயன்றதை யாரிடம் கேட்காமல் தனது உழைப்பின் வாயிலாக சேமித்த பணத்தை கொண்டு சமூக நலத்திற்கும், மனிதநேயத்திற்கும் அர்ப்பணித்த தலைவராக திகழ்ந்து வருகிறார். தமிழகத்தின் பல பின்தங்கிய சமூகங்களை உயர்த்துவதில் தீவிரம் காட்டு வருகிறார். இவரது பணிவு மற்றும் மக்கள் சேவை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

சமீபத்தில், கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள வாலகிரி கிராம பழங்குடியினர் குடியிருப்பில் வசிக்கும் மிக வறிய 14 குடும்பங்களுக்கு நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் சதீஷ்குமார் பான்சாலேவின் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கொடைக்கானல் ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு டார்பாலின் குடில்களில் வசித்த இந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான, தேவைகளுக்கு ஏற்ற நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தப் பணியின் முழு செலவையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது சதீஷ்குமார் பான்சாலேவின் அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது..
மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இளம் பெண் தனக்கு பாதுகாப்பான வீடு அமைத்து தந்த சதீஷ்குமார் பான்சாலேவின் அறக்கட்டளைக்கு தனது மனம் நெகிழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான நன்றியை அவர் தெரிவித்தது அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
“இந்த புதிய வீடு எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிட்டது. இப்போது UPSC தேர்வுக்காக படித்து, ஒருநாள் சாமானிய மக்களுக்கு சேவை செய்யும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதற்கான உறுதி எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்வை மாற்றிய உதவிக்காக சதீஷ்குமார் பான்சாலேக்கு என்றென்றும் நன்றி கூறிக் கொண்டிருப்போம் என்று உள்ளத்தில் இருந்து நன்றிப்பெருக்குடன் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அவரது இந்த வார்த்தைகள், இத்தகைய மனிதநேயப் பணிகள் எவ்வளவு ஆழமான மாற்றத்தை உருவாக்குகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன. இது குடியிருப்பையும், அதைவிட முக்கியமான மனப்போக்கையும், கனவுகளையும் மாற்றுகிறது. பல ஆண்டுகளாக சதீஷ்குமார் பான்சாலே தமிழகத்தில் வீடுகள் கட்டித் தருவது, மருத்துவம், கல்வி, பழங்குடியினர் நலன், வாழ்வாதார மேம்பாடு போன்ற துறைகளில் பல சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் மரியாதை மற்றும் முன்னேற்ற வாய்ப்புகளை வழங்குவதே அவரது நலத்திட்டங்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. இவரது இந்த செயல்பாடுகள் தஞ்சாவூரின் பெயரை இன்னும் புகழ் மிக்கதாக மாற்றி வருகிறது.





















