Thanjavur power shutdown: தஞ்சை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை - முழு விவரம் இதோ
Thanjavur Power Shutdown: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருப்பனந்தான் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருப்பனந்தான் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை 21ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் முன்கூட்டியே அறிவிக்கப்படும். இந்த பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும்.
வழக்கமாக காலை 9 மணி/10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது, பல்வேறு டிரான்ஸ்பார்மகளை பழுது பார்ப்பது மற்றும் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் மாநகர உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:
கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் நாளை 21ம் தேதி (சனிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகம் பெறும் கும்பகோணம் மாநகர் முழுவதும் மற்றும் செட்டிமண்டபம், காம்ராஜர் நகர் சத்திரம் கருப்பூர், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருவிடைமருதூரில் மின் தடை
இதேபோல் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் துணை மின் நிலையத்தில் நாளை 21ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடுமின்சாரவாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்த துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் திருப்பனந்தாள். சோழபுரம், பாலாக்குடி அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல் நாயக்கன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம் கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல்மாலை 5 மணிவரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவையாறில் மின் தடை
திருவையாறு 33 கிலோ வாட் துணைமின்நிலையம் மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி 33 கிலோவாட் துணை மின்நிலையங்களில் நாளை 21-ம்தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலையங்களுக்குட்பட்ட திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை, கரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை,காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை திருவையாறு உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






















