சென்னையில் பைலட் & உதவி பொறியாளர் வேலை! விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25! மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: இந்த விஷயம் தெரியுங்களா உங்களுக்கு... சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 25ம் தேதிக்கு முன்பே விண்ணப்பங்கள் அனுப்பி இருக்கணும். என்ன ரெடியாகிட்டீங்களா?
பணி: பைலட் (Contract basis), காலியிடங்கள்: 2, சம்பளம்: பயிற்சி விமானி (பயிற்சியின் போது)மாதம் ரூ.1,50,000,
தகுதி: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் வெளிநாட்டுக்குச் செல்லும் கப்பல் பைலட்-க்கான முதுகலைப் பட்டம்(எப்ஜி) அல்லது தகுதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான(சிஓசி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பைலட்டாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும். துறைமுக தலைமை மருத்துவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உடல்நலன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட வேலைவாய்ப்பு பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 25 ஆம் தேதிக்கு முன்னரே வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: துணைக் காப்பாளர், கடல்சார் துறை, சென்னை துறைமுக ஆணையம், ராஜாஜி சாலை, சென்னை. பின்-600 001 (The Deputy Conservator, Marine Department, Chennai Port Authority, Rajaji Salai, Chennai. Pin-600 001) நேர்முகத் தேர்வு நடைபெறும் கடைசி நாள்: 25.6.2025
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். எனவே தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து காலதாமதமின்றி அனுப்புங்கள். அந்த பணி வாய்ப்பு உங்களுக்காக கூட இருக்கலாமே!!!
உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) பணிக்கான அறிவிப்பு
திருச்சி, மதுரை டைடல் பார்க்கில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர்(எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை டைடல் பார்க் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ததியானவர்களிடம் இருந்து வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர், காலியிடங்கள்: 2, சம்பளம்: மாதம் ரூ.50,000, வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல தொடர்புகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.tidelpark.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.6.2025. மறந்திடாதீங்க... மறந்து இருந்திடாதீங்க. அசால்டாக இல்லாம அலார்ட்டாக இருந்தால் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.





















