மேலும் அறிய

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள்: மழைநீர் வீணாகாமல் இருக்க அமைத்த அற்புத குளங்கள்

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் என்றாலே ஸ்பெஷல்தான். திரும்பும் இடமெல்லாம் ஸ்பெஷல்தான்... அதிலும் தஞ்சை என்றால் ஸ்பெஷலோ ஸ்பெஷல்தான். என்ன அழகு எத்தனை அழகு... தஞ்சையில் உள்ள அனைத்தும் அழகோ அழகுதான். நம் முன்னோர்கள் சிறந்த அறிவு ஜீவிகள். முக்கியமாக நீர் மேலாண்மையில் சிறந்தவர்கள். அதனால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு தஞ்சையில் குளங்கள் வெட்டினர்.

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்குபுறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழிகள் அமைக்கப்பட்டன. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும், மழைநீரும் சேமிக்கப்பட்டன. இதுமட்டுமல்ல பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்கப்பட்டது.

தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார் பாண்டிய மன்னன் வல்லபனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன் என்பவர். தஞ்சை நகரில் சாமந்த நாராயண விண்ணகரம்  என்ற பெருமாள் கோயிலை நிறுவி, அக்கோயிலுக்காக சாமந்த நாராயண குளம் என்ற குளம் ஒன்றை வெட்டினார். பின்னர், அங்கு ஒரு புதுக்குடியிருப்பையும் தோற்றுவித்தார் சாமந்தன்.

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள்: மழைநீர் வீணாகாமல் இருக்க அமைத்த அற்புத குளங்கள்

அப்படி அவர் தோற்றுவித்த குடியிருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் பிரமாண்டமாய் மாறியுள்ளது. தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த இக்கோயில் கீழவாசல் பகுதியில் கீழை நரசிம்மர் என்ற பெயரில் இன்றளவும் உள்ளது. தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை சிறப்பு மிக்க நம் முன்னோர்களின் நீர் மேலாண்மைக்கு முக்கிய பகுதியாக விளங்கும் சாமந்தான் குளத்தையும் வந்து பார்த்து செல்கின்றனர். பெரிய கோயில் அருகே சிவகங்கை குளம் நிரம்பினால் அந்த தண்ணீர் அய்யன் குளம், சாமந்தான் குளத்தில் சென்று வடிவது போல் மிக நுணுக்கமான முறையில் எவ்வித தொழில்நுட்பங்களும் இல்லாத காலத்திலேயே நீர் சேமிப்பை செய்து காட்டிய நம் முன்னோர்கள் உருவாக்கிய குளங்களை பார்ப்பதும் சிறப்பு தானே. தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10.25 கோடியில் சாமந்தான்குளம், அய்யன்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில் அய்யன்குளத்துக்கு, மன்னர் காலத்தில் பயன்படுத்திய நீர் வழிப்பாதையை கண்டறிந்து, அவை சீரமைக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், சுவரில் ஓவியங்கள் என பணிகள் நடந்துள்ளது. இது சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாமந்தன் குளத்திற்கு தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Embed widget