தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்ட உலகளாவிய நிறுவனத்தின் பெயர் மாற்றம்
தஞ்சாவூரை அமெரிக்காவின் சிலிக்கான்வேலி போன்று ஆற்றல்மிக்க நகரமாக மாற்ற வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து உலகளாவிய நிறுவனம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாருக் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தற்போது ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன் என்று மறுபெயரிடப்பட்டு அதன் அறிமுகவிழா நடைபெற்றது.
தஞ்சையில் பிறந்தவர் உருவாக்கிய நிறுவனம்
தஞ்சையில் பிறந்த ஹம்சவர்தன்மோகன் சாதாரணமான குடும்பசூழலில் பிறந்து வளர்ந்தவர். இவர் பல சவால்களை எதிர்கொண்டார், இருப்பினும் அவர் வணிகத்தின் மீது கொண்ட வலுவான நம்பிக்கையும், அசைக்க முடியாத லட்சியமும் அவரது எதிர்கால வெற்றிக்கு களம் அமைத்தது. 2016ம்ஆண்டில் ஹம்சவர்தன் மோகன் தனது தலைமையின் கீழ் அதிவேகமாக வளர்ந்த நிறுவனமான பிபிஎஸ் நிறுவனத்தை நிறுவினார். ஒரு ஊழியர் உடன்தொடங்கிய இந்நிறுவனம் தற்போது 500க்கும் மேற்பட்ட தொழில் வல்லுனர்களை பணியமர்த்தி விரிவடைந்துள்ளது.
தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டது
தமிழ்நாட்டில் கலாச்சார வளமிக்க நகரமான தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்ட பிபிஎஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் கிளை அலுவலகத்தையும், அமெரிக்கா முழுவதிலும் பங்காளர் வணிக அலுவலகங்களுடன் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளது. ஹெல்த்கேர் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மருத்துவபில்லிங், மக்கள் மேலாண்மை, வணிக மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் ஹம்சவர்தனின் நிபுணத்துவம் நிறுவனத்தின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் தொடங்கினார்
தஞ்சாவூர் போன்ற இரண்டாம் நிலை நகரத்திலிருந்து வெற்றிகரமான வணிகத்தின் தலைமைக்கு ஹம்சவர்தன் முன் வந்தது அவரது விடாமுயற்சியும், தொலைநோக்கு பார்வையும் முக்கியமான சான்றாகும். பெண்களுக்கு வாய்ப்புகளையும், பணியிடபாதுகாப்பையும், மேம்படுத்துதல் ஆகியவற்றில் அவரது அர்ப்பணிப்பு அவரது முற்போக்கான கண்ணோட்டத்தை எடுத்துக்காட்டுகிறது. பிபிஎஸ்ஐத் தவிர ஹம்சவர்தன் டிபிஎஸ், எல்ஏஹெச் பார்ட்னர்ஸ், டிஇபிஎல் எக்ஸ்போர்ட்ஸ், பிபிஎஸ் இன்பிராஸ்பேஸ், மற்றும் ஆஸ்ட்ரோவின் ஹெல்த்கேர் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிறுவியுள்ளார்.
மறு பெயரிட்டு அறிமுகப்படுத்தும் விழா
2026இல் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தும் முனைப்பில் இருக்கிறார். இதையடுத்து அவர் தனது அனைத்து முயற்சிகளையும் கொண்டு வருவதற்கான திட்டங்களுடன்பாரூக்பிசினஸ் சொல்யூஷன்ஸ்-ஐஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்று மறுபெயரிட்டுள்ளார். ஹம்லிபிராண்டின் கீழ் அவரது அனைத்து வணிகமுயற்சிகளையும் ஒருங்கிணைக்க உள்ளார்.
தஞ்சாவூரை அமெரிக்காவின் சிலிக்கான்வேலி போன்று ஆற்றல்மிக்க நகரமாக மாற்ற வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளார். பாரூக் பிசினஸ் சொலுஷன்ஸ் தற்போது ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்று மறுபெயரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லானநிகழ்ச்சியாகபார்க்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில் நிறுவனர் மற்றும் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஹம்சவர்தன்மோகன், வாரிய இயக்குனர்கள் நிவேதா ஹம்சவர்தன் மற்றும் விஜயலட்சுமி மோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து ஹம்சவர்தன் மோகன் புதியநிறுவன பெயரான ஹாம்லி பிசினஸ் சொல்யூஷன்ஸ்சை அறிமுகப்படுத்தினார். பின்னர் ஹாம்லீ பிராண்டின் கீழ் அனைத்து வணிக முயற்சிகளையும் ஒருங்கிணைத்து அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இந்த மாற்றத்தின் மூலம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று விளக்கி கூறினார்.