மேலும் அறிய

தஞ்சாவூரில் தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு, சிறப்பு முகாம்! விவரம் இதோ..

சிறப்பு முகாம் நவம்பர் 9,10, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை கோட்டத்தில் தபால் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நாளை (நவ.09) தொடங்கவிருப்பதாக பட்டுக்கோட்டை கோட்ட தபால் கண்காணிப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பட்டுக்கோட்டை தபால் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நாளை, (நவம்பர் 9), நாளை மறுநாள் (நவ.10), நவம்பர் 23, 24ஆகிய தேதிகளில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது மத்திய அரசு நேரடியாக தபால் துறை மூலம் நடத்தும் திட்டமாகும். இதில் குறைவான ப்ரீமியம் வசூலிக்கப்பட்டு அதிக போனஸ் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், பதிவு பெற்ற நிறுவன ஊழியர்கள், நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள், மென்பொருள் வல்லுநர்கள் சேரலாம்.

திண்டுக்கல் தபால் பிரிவின் மண்டல கண்காணிப்பாளர் வெறும்  ரூ. 399/- செலுத்தினால் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தினந்தோறும் தமிழகத்தில் பல இடங்களில் சாலை விபத்துகள் நடந்து வருகிறது. ஆனாலும் வாகன ஓட்டிகள் விபத்து காப்பீடு (insurance) இல்லாமல் தான் வாகனத்தில் பயணம் செய்கின்றனர். இதன் காரணமாக ஒரு விபத்து ஏற்பட்டால் பல்வேறு சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

இதேபோல் முன்னதாக திண்டுக்கல் தபால் பிரிவின் மண்டல  கண்காணிப்பாளர் ரூ.399/- செலுத்தினால் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு கிடைக்கும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் அஞ்சல் பிராந்திய  கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

"இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, TATA AIG, ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் உடன் இணைந்து, ரூ. 10 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையைப் பெற, ஆண்டுக்கு ரூபாய் 399/- செலுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இத்திட்டமானது தபால்காரர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.

18 வயது முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள்  இந்தத் திட்டத்தில் சேரலாம் எனவும், இந்த திட்டத்தில் இணைய எந்த ஒரு சான்றிதழ் சரிபார்ப்பும் இருக்காது. திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தபால் அலுவகத்துக்குச் சென்று, தங்கள் கைரேகைகளை பதிவு செய்து, 5 நிமிடத்திற்குள் இணைய முடியும்.

இந்த நன்மை பயக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் மருத்துவ செலவுகளையும், விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் போது ஏற்படும் நிதி உதவியையும் மக்கள் பெறலாம்! மேலும் குடிமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று நன்மை அளிக்கும் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்! இந்த திட்டமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாராமெடிக்கல் துறை சார்ந்தவர்கள், மருத்துவத் தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்கள், தணிக்கையாளர்கள், தொழில்சார்ந்த பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்தவர்களும் சேரலாம்.

கிராமிய தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் கிராமத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் சேரலாம், ப்ரீமியம் தொகை, முதிர்வுத் தொகைக்கு முழுமையான வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
Embed widget