மேலும் அறிய

பெட்ரோல் விலை உயர்வு - தஞ்சையில் பாஜக நடத்திய குதிரை வண்டி பயணத்தால் போக்குவரத்து நெரிசல்

’’தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து புறப்பட்ட குதிரை வண்டி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றதாக் போக்குவரத்து பாதிப்பு’’

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும் மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு 100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் விலை உயர்வு - தஞ்சையில் பாஜக நடத்திய குதிரை வண்டி பயணத்தால் போக்குவரத்து நெரிசல்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது, தமிழக அரசு பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர்களின் விலை உடனடியாக குறைக்க வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பைக், கார் போன்ற வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.

இதனால் ஏழை எளிய , நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு வரியை குறைத்தால், பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு குறைக்காமல், மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்து வருகின்றது. இதனை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில், பாஜகவை சேர்ந்தவர்கள், மூன்று குதிரை வண்டியில் ஊர்வலமாக கோஷமிட்டபடி வந்தனர். தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து புறப்பட்ட குதிரை வண்டி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சென்றது. இதனால் தஞ்சாவூர் நகரப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வு - தஞ்சையில் பாஜக நடத்திய குதிரை வண்டி பயணத்தால் போக்குவரத்து நெரிசல்

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ், அமைப்புசாரா தொழிலாளர் அணி செயலாளர் பாண்டிதுரை, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேஸ்வரன், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர்கள் அருண், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். மகளிரணி மாவட்ட தலைவி பூமிசெல்வி வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கென்னடி, முரளி, ஆசைக்கனி, ஜீவஜோதி, மாநகர தலைவர்கள் ரமேஷ், வெங்கடேசன், மாநகர செயலாளர் விக்னேஷ்குமார், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் இளைஞரணியினர், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

ABP Premium

வீடியோ

நிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?... ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு

"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
KKR New Captain:  Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?

அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்

Embed widget