மேலும் அறிய

பயணிகளே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... 3 ரயில்களின் சேவையில் மாற்றமாம்

நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

தஞ்சாவூர்: ரெயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் திருச்சி வழியாக செல்லும் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் – வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி பாலக்காடு – திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) நேற்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வரும் 10, 13-ஆம் தேதிகளில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும்.

மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16811) வரும் 10, 13-ஆம் தேதிகளில் வீரராக்கியம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை இயக்கப்பட்டு, வீரராக்கியத்திலிருந்து சேலம் வரை இயக்கப்படாது. மேலும், சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16812) 10, 13-ஆம் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும்.

அந்த ரெயில் சேலத்திலிருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, ரெயில் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து சேவை என்பது மக்களால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்து வசதி ஆகும். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும், மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை விரும்புவோர் ஏராளாம். அதுவும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக பயணிகள் சேவையில் ரயில்வே அமைச்சகம் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. பட்ஜெட் விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.

இரவு நேரப் பயணங்களில் படுக்கை வசதி இருப்பதால் சோர்வின்றி பயணிக்கலாம். பேருந்துகளில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அதிகமான உடமைகளை ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லலாம். பிற போக்குவரத்தை விட ரயில்கள் பாதுகாப்பான பயணத்தை வழங்குகின்றன. வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் சிக்கனமான பயண அனுபவத்தை ரயில்வே வழங்குகிறது. இட வசதி, கழிவறை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற வசதிகள் இருப்பதால், குடும்பத்துடன் பயணம் செய்ய இது சிறந்த தேர்வாக அமைகிறது.  இதுபோன்ற வசதிகளால் நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்த ரயில் பயணத்தை மேலும் மேம்படுத்துவதற்காகதான் ரயில்வே நிர்வாகம் பல்வேறு புனரமைப்பை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி: மக்கள் குவிந்ததால் பரபரப்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை இஃப்தார் கொண்டாட்டம்: 2000 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Embed widget