மயிலாடுதுறையில் சாலையின் நடுவே நின்ற அமைச்சர் வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு
தனியார் ஸ்கேன் சென்டர் திறப்பு விழாவிற்கு வந்த வனத்துறை அமைச்சரின் கார் சாலையின் நடுவே நின்றதால் மயிலாடுதுறையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
![மயிலாடுதுறையில் சாலையின் நடுவே நின்ற அமைச்சர் வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு Minister's vehicle parked in the middle of the road in Mayiladuthurai causing traffic damage TNN மயிலாடுதுறையில் சாலையின் நடுவே நின்ற அமைச்சர் வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/02/b1490bfb926dee3f641930bb9790f18d1683021685277186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தனியார் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா ஒன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர் உடன் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய நகர திமுக பொறுப்பாளர்கள் என்று ஒரு பெரும் படையே தனித்தனி வாகனங்களில் வந்திருந்தது.
மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் நகருக்குள்ளேயே முக்கிய இடத்தில் ஸ்கேன் சென்டர் அமைந்திருந்ததால் அமைச்சருடன் வந்திருந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் நெரிசலை ஏற்படுத்தும் படி நின்று கொண்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்ற காரணத்தால், அந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் முக்கியமான மையப்பகுதி என்பதால் சாலையின் நடுவே தடுப்பு கட்டைகள் அமைத்து செல்வதற்கு ஒரு வழியும், போவதற்கு ஒரு வழியும் என்று இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு இருக்கும்.
A R Rahman: ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு இப்படி ஒரு அவமானமா? புனே போலீசாருக்கு நெட்டிசன்கள் கண்டனம்!
ஆனால் அமைச்சர் மற்றும் மற்ற திமுக கட்சியினரின் காருகள் ஒரு வழியை முழுவதும் ஆக்கிரமித்ததால் ஒரு சாலையில் அப்படியே போக்குவரத்தை நிறுத்திவிட்டு, ஒரு வழி பாதையில் வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் திருப்பி அனுப்பினர். ஒருவழியாக நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் நிகழ்ச்சி முடிவடைந்து அமைச்சர் புறப்பட்டு சென்றதும் போக்குவரத்து காவலர்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், போக்குவரத்து அதிகம் நிறைந்த முக்கிய பிரதான சாலையில் தனியார் நிறுவனத்தின் ஸ்கேன் சென்டர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அவர்களை இறக்கி விட்டு கார்களை வேறோரு இடத்தில் பார்க்கிங் செய்து மக்களுக்கு இடையூறு இன்றி வழிவகை செய்திருக்க வேண்டும்.
Income Tax Raid: தொடரும் வரிமான வரித்துறை ரெய்டு.. சிக்கிய பிரபல ஜவுளிக்கடை... 60 இடங்களில் சோதனை..
ஆனால் ஆளும் கட்சி என்ற மமதையில் இது போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்வது மிகவும், கண்டிக்கத்தக்கது என்றும், இதுபோன்ற தனியார் நிகழ்வுக்கான மக்களை வதைப்பது சரியான அனுமுறை அல்ல, இது போன்று செயல்களில் திமுகவினர் தொடர்ந்து ஈடுப்பட்டால், அது வரும் தேர்தல்களில் வேறுமாதிரியான முடிகளை எதிரொலிக்கும் என கருந்து தெரிவித்துள்ளனர்.
குளவி கூட்டை அழிக்க பெட்ரோல் ஊற்றியபோது விபரீதம்.. பள்ளி மாணவன் மீது தீப்பற்றி எரிந்து படுகாயம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)