மேலும் அறிய

ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்

ADMK BJP Alliance : ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைப்பார்கள். அந்த அடிப்படையில்தான் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விழாவில் இபிஎஸ்

அதிமுக சார்பில் சென்னையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய பரிசுப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி,  சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசின் மூலம் எண்ணற்ற திட்டங்களை வகுத்து, பல்வேறு நன்மைகள் கிடைக்கும்படி செய்யப்பட்டது.

இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர் 2000 வருடங்களுக்கு முன்னால் நமக்கு போதித்த போதனைகள் இன்றைக்கும் நமக்கு பயனுள்ளதாக இருப்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். இயேசுபிரான் அவர்கள் தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாக வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும், மக்கள் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் நமக்கு அறிவுறுத்தினார். இந்த கருத்தை விளக்க ஒரு கதை ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

குட்டி கதை சொன்ன இபிஎஸ்

ஒரு ஊரில், ஒரு விவசாயி, தனது விளை நிலத்தின் அருகில் ஓர் ஆட்டுப்பண்ணை வைத்து, நிறைய ஆடுகளை வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை கண்காணிக்க மேய்ப்பர்களையும், காவலாளிகளையும் நியமித்தார். நல்ல பராமரிப்பால் ஆடுகள் நன்கு வளர்ந்தன. இதை பார்த்த சில ஓநாய்கள், எப்படியாவது இந்த ஆடுகளை கவர்ந்து சென்று, நமக்கு இரையாக்க வேண்டும் என திட்டமிட்டன. ஆனால் காவலாளிகளின் கண்காணிப்பு கடுமையாக இருந்ததால் ஓநாய்களால் ஆடுகளைக் கவர்ந்து செல்ல முடியவில்லை. எனவே ஓநாய்கள் தந்திரமாக ஆடுகளை கவர்ந்து சென்று இரையாக்க திட்டமிட்டன. ஒருநாள் இரவில், ஓநாய்கள் ஆட்டு தோலை தங்கள் மேல் போர்த்திக் கொண்டு, கள்ளவாசல் வழியாக உள்ளே வந்து, தாங்களும் ஆடுகள்தான் என்பதைப் போல நடித்து, அப்பாவி ஆடுகளை நம்ப வைத்து, தந்திரமாக அவைகளை அழைத்துச் சென்று தங்களுக்கு இரை ஆக்கிவிட்டன.

ஓநாய் கூட்டத்தை நம்பாதீங்க

அந்த அப்பாவி ஆடுகள், தாங்கள் ஓநாய்க்கு இரையாகும் போதுதான், அந்த ஓநாய்களின் சுய ரூபத்தை அறிந்து, 'ஐயோ மோசம் போய்விட்டோமே' வருந்தின. என இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய உண்மை என்னவென்றால், 'காலம் கடந்து வந்த ஞானோதயத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை' இன்றைய அரசியலில், பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் 'விடியல்' என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது.

தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டும் என்பதற்காக, சிறுபான்மை மக்களின் வாக்குகளை தந்திரமாக பெறுவதற்காக கபட நாடகம் ஆடுகின்றனர். ஒரு சில அரசியல் மேடைகளில் கடவுள் இல்லை என பேசுவார்கள். மற்றொரு மேடையில் எனது மனைவி கிறிஸ்தவர், எனவே நானும் கிறிஸ்தவர் தான் என பொய் பேசுவார்கள்.இன்னொரு மேடையில் நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல எனக் கூறி நடிப்பார்கள். இந்த கபட வேடதாரிகள் யார் என்பதை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி ஏன்.?

ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைப்பார்கள். வைத்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் அதிமுகவும் கூட்டணி 1991 நாடாளுமன்றத் தேர்தல், 2001 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆக, கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது. அது, அதிமுகவிடம் இருக்கிறது என்பதை சிறுபான்மை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனவே மக்கள் குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்கள் வருகின்ற தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் நடக்கின்ற சீர்கேடுகளை களைய அதிமுகவோடு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
Min Ramesh: ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்
ஃபோட்டோஷாப்பில் தமிழை அகற்றி பொய் பரப்புகிறார்கள், சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் வார்னிங்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget