Local Body Election | மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு துவங்கியது
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை துவங்கி விறுவிறு
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு வாபஸ் பெறுதல் அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரம் என தமிழகம் முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டி காணப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வான வாக்கு பதிவு தமிழகம் முழுவதும் இன்று காலை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக நாகப்பட்டினத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்திக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் 72 ஆயிரத்து 846 ஆண்கள், 77 ஆயிரத்து 77 பெண்கள் மற்றும் 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 938 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 123 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்கள் என 596 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
"அமீர் செஞ்ச உதவிய சாகுறவரை மறக்கமாட்டேன்", பருத்திவீரன் சரோஜாம்மா சொன்ன மெல்ட்டிங் மொமெண்ட்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இன்று நடைபெறும் வாக்குப் பதிவிற்காக மாவட்டம் முழுவதும் 177 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Petrol-Diesel Price: மாற்றம் இருக்கா? இல்லையா? இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 854 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தலைமையில் 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , 3 காவல் துணை கண்காணிப்பாளர், 17 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 740 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறுவதை அடுத்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.