முதல்வர் ஸ்டாலின் மெத்தனப் போக்கினால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கணவருக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் கணவருடன் வந்து மாலை மாற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் மத்திய அரசின் திட்டங்களை டெல்டாகாரன் என்று கூறும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மெத்தனப் போக்கினால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் உள்ள ஆயுள் விருத்தி தரும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று வழிபாடு மேற்கொண்டார்.
கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கோயிலுக்கு வந்த வானதி சீனிவாசனுக்கு பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், கோயில் நிர்வாகி விருதகிரி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சிரித்த முகத்துடன் ஆலயத்தில் கஜ பூஜை, கோ பூஜை செய்து, கள்ளவாரன பிள்ளையார், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளில் கணவருடன் தரிசனம் செய்தார். அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயர்களில் அர்ச்சனை செய்தார். மேலும் பாஜக ஒரு பெரிய குடும்பம் என்று கூறி தன்னுடன் வந்திருந்த பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் பெயர் நட்சத்திரம் கூறி அர்ச்சனை செய்ய வலியுறுத்தினார்.
தொடர்ந்து ஸ்ரீ அபிராமி சன்னதியில் வழிபாடு மேற்கொண்டு வானதி சீனிவாசன் தம்பதிகள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு இனிப்புகள் ஊட்டி 60 வயது பூர்த்தி விழாவை கொண்டாடினர். பின்னர் பாஜக நிர்வாகிகள் தம்பதிகளிடம் ஆசி பெற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறுகையில், "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனாலும், காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும், விவசாயிகள் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
TN Vechile Registration: வரியை உயர்த்திய தமிழ்நாடு அரசு! ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சரிந்த வாகன பதிவு!
இவர்களுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்றால், டெல்டா காரன் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும். அதை விடுத்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் அறிக்கை விடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது. பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும், மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை கொடுக்காததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. மாநில அரசின் மெத்தனப் போக்கினால் மத்திய அரசின் திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. அதை உயர்த்தி வழங்குவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Marlon Samuels Ban: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சாம்வேல்ஸ் 6 ஆண்டுகள் விளையாட தடை - ஐ.சி.சி. அதிரடி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூட்டு சாவி, சுத்தியல் கதை சொல்லி விமர்சனம் செய்தது குறித்து கூறுகையில், அமைச்சர் உதயநிதி புதிதாக கதை சொல்ல ஆரம்பித்துள்ளார். நிறைய கதைகள் சொல்லட்டும், சொல்ற கதைகளுக்கெல்லாம் நீதிமன்றத்தில் வேறு மாதிரி பதில் கூறியுள்ளார். தற்போது நான் கோயிலில் இருப்பதால் வேறு மாதிரி சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். இந்நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் அகோரம், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் உடன் இருந்தனர்.