திருச்சியிலிருந்து அய்யாசாமிப்பட்டிக்கு சாலை மார்க்கத்தில் வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு
கட்சி சார்பில் 4900 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கியூஆர் கோடுடன் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் நடக்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தஞ்சாவூரிலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் விஜய் வந்து கொண்டு இருக்கிறார். அவரை பல இடங்களில் தொண்டர்கள் சாலையில் மறித்து வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு நேற்று மாலைதான் போலீசார் அனுமதி அளித்தனர். கட்சி சார்பில் 4900 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கியூஆர் கோடுடன் கொண்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்..
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக திருச்சிக்கு தனி விமானத்தில் வந்து தஞ்சாவூருக்கு பிரச்சார வாகனம் மூலம் வந்து கொண்டிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 4,900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 9 ஏக்கரில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்காக மேற்கூரையுடன் கூடிய பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று மும்முரமாக நடந்து முடிந்தது. வாகனங்கள் நிறுத்த சுமார் 15 ஏக்கரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
போலீசார் சார்பில் 32 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு நேற்று காலைதான் தவெக கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு துறைகளிடம் அனுமதியும் வாங்கவில்லையாம். இநநிலையில் நேற்று மாலை பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் போலீசார் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் தவெக கொடிகள், குடிநீர், மொபைல் டாய்லெட் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று முன்தினம் இரவு திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் தஞ்சாவூர் எஸ்,பி,, ராஜாராம் மற்றும் போலீசார் பார்வையிட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் பந்தல் அமைக்கும் பணிகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டார். மேலும் நேற்று மாலை நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் பகுதிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வருகை தந்து பார்வையிட்டார். தற்போது நிகழ்ச்சி அரங்கத்தில் தொண்டர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விஜய்யை பார்க்கும் உற்சாகத்தில் உள்ளனர். திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு சாலை மார்க்கமாக வரும் விஜய்யை பல்வேறு இடங்களில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சாலையில் நின்று வரறவேற்பு அளித்து வருகின்றனர். 400க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.























