22 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை - ஆவேசமான கிராம மக்கள்..!
மயிலாடுதுறை அருகே 22 ஆண்டுகளாக செப்பனிடப்படாத சாலையை சரி செய்து தர கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது காமராஜர் காலனி. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காமராஜர் காலனிக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை மணல்மேடு சாலையையும், கல்லணை சாலையும் இணைக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை பல ஆண்டுகள் கடந்தும் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
ABP with IIM : போலி செய்திகளைக் களையெடுக்க ஐஐஎம் இந்தூர் உடன் கைகோர்க்கும் ABP நெட்வொர்க்..
இதனால் அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்து ஏற்பட்டு காயமடைவதும், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் வரமுடியாத சூழல் நிலவாதகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த சாலை அமைப்பதற்கு இரண்டு முறை டெண்டர் வைத்தும் சாலைப் பணிகள் துவங்கவில்லை என்று குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் திருவிழுந்தூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் தடுப்புகளை அமைத்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு சாலை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே
பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் புதிய தார் சாலை போட்டு தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு காமராஜர் காலனி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், தாங்கள் தற்காலிகமாக தான் தற்போது கலைந்து செல்வதாகவும், ஒரு மாதத்தில் எங்களுக்கு புதிய தார் சாலை போட்டுத்தரவில்லை எனில் இப்பகுதி மக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்று இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்