செவித்திறன் குறைபாடு உடைய மாணவரின் கல்லூரி கட்டணத்தை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..
செவித்திறன் குறைபாடு உடைய மாணவனின் ஒராண்டு கல்லூரி கட்டணத்தை ஏற்றுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை செய்திகள்..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான ஜெயவசந்தன். செவி மற்றும் பேச்சு குறைபாடு உடைய ஜெயவசந்தன் சென்னையில் உள்ள காதுகேளாதோர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமில்லாமல் ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் ஜெயவசந்தனுக்கு ஏழ்மை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கல்வி உதவி தொகை மற்றும் கல்வி கடன் பெற்று படிப்பதற்கு உதவிட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மாற்றுத்திறனாளி மாணவன் ஜெயவசந்தன் மனுவினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பெற்றுக் கொண்டவர், அந்த மாணவணின் ஓராண்டு கல்விச்செலவை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து அளிப்பதாக அப்போது உறுதியளித்தார். செவி மற்றும் பேச்சுக் குறைபாடு உடைய மாணவனுக்கு படிப்பை தொடர மாவட்ட ஆட்சியர் நிதி உதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேரழந்தூர் கடைவீதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்: கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கடைவீதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இன்று திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராமல் இருப்பதாலும், வருகின்ற பேருந்துகளும் இருக்கைகள் முழுவதும் நிரப்பப்பட்டு மாணவர்களும், மாணவிகளும் தொங்கிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு தேர்வுகள் எழுத கூட செல்லமுடியாமல் போய்விடுகின்றன என வேதனை தெரிவித்தனர்.
பள்ளி, கல்லூரியிலும் பயிலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை முதல் தேரழந்தூர் வழித்தடத்தில் கோமல் வழியாக நக்கம்பாடி, பாலையூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய ஊர்களுக்கு மேலும் இரண்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் வட்டாட்சியர் கோமதி, காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன் மற்றும் காவல்துறையினர் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பிறகு கூடுதல் பேருந்துகள் இயக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் உடன்பாடு ஏற்பட்டு மாணவர்களும் மாணவிகளும் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால், சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்திருத்தால் தேரழந்தூர் நக்கம்பாடி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற