மேலும் அறிய

கும்பகோணத்தில் இப்படி ஒரு இடம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? போடுங்க ஒரு விசிட்டை!

கோடை விடுமுறையில் எங்கு செல்லலாம். எதை பார்க்கலாம் என்று நினைப்பீர்கள். உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் செல்லுங்கள்.

தஞ்சாவூர்: கோடை விடுமுறையில் எங்கு செல்லலாம். எதை பார்க்கலாம் என்று நினைப்பீர்கள். உங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் செல்லுங்கள். அங்கு கணிதத்தில் தனக்கு நிகர் யாருமில்லை என்று ஒப்பிட முடியாத அசாத்திய சாதனைகளை செய்து, நிகரில்லாத கணிதச் சூத்திரங்களை மனிதகுலத்துக்கு அளித்த கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்ந்த வீட்டுக்கு ஒரு விசிட்டை போடுங்கள். எங்கெங்கோ நின்று செல்பியும், புகைப்படமும் எடுப்போம். இங்கு அழிக்க முடியாத நினைவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இளமைக்காலத்தில் பெரும் பகுதி கும்பகோணத்தில்தான்

சீனிவாசன் - கோமளம் தம்பதிக்கு 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜன். இவர் பிறந்தது ஈரோடாக இருந்தாலும் இளமைக் காலத்தின் பெரும்பகுதி இவருடைய பூர்வீக ஊரான கும்பகோணத்தில்தான் கழிந்தது என்பது நினைவுப்படுத்த வேண்டிய ஒன்று.

கணிதத்தின் ஆழ் உண்மைகளை கண்டுபிடித்தார்

இந்த உலகில் 33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுபிடித்தார். 1914ம் ஆண்டு முதல் 1918-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார் என்றால் வியப்புதானே. அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல் என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம்.

கும்பகோணத்தில் இப்படி ஒரு இடம் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா? போடுங்க ஒரு விசிட்டை!

கும்பகோணத்தில் உள்ள வீடு

அடிப்படை இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் வரை எனப் பல்துறைகளின் உயர்மட்ட ஆய்வில் ராமானுஜனின் சூத்திரங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தின் நடுநாயகமாக விளங்கும் புகழ்பெற்ற சாரங்கபாணி கோவில் அருகே சன்னதித் தெருவில்தான் இருக்கு கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு.

கேம்பிரிட்ஜ்க்கு சென்ற ராமானுஜன்

19ம் நூற்றாண்டை சேர்ந்த சின்னஞ்சிறிய இந்த வீட்டில் வாழ்ந்த ராமானுஜன்தான் பிற்காலத்தில் கேம்பிரிட்ஜுக்குப் சென்றார். பெரும் பெருமைகளை சம்பாதித்த ராமானுஜனின் வீடு மிகச்சிறியது. கணிதத்தின் மிகப் பெரிய உண்மைகளைக் கண்டறிந்து உலகறியச் செய்த கணிதமேதை வாழ்ந்த வீட்டை பார்க்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். நாமும் பார்க்கலாமோ!!!

ராமானுஜனின் தாய்வழித் தாத்தா வேலைபார்த்த கடை 1891-ல் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரத்துக்கு வந்தது. 1892-ல் காஞ்சிபுரத்திலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில்தான் ராமானுஜன் கல்வி பயின்றார். 1894-ல் அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப்பள்ளியில் ராமானுஜன் கல்வியைத் தொடர்ந்தார். மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று, 1897-ல் தொடக்கக் கல்வியை நிறைவுசெய்தார் ராமானுஜன். 1897-ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

உலக புகழ்பெற்ற கணித மேதையின் ஆரம்ப காலங்கள்

அங்கு தொடங்கிய ராமானுஜனின் கணிதப் பயணம், கேம்பிரிட்ஜ் வரை மிகப்பெரிய நீண்ட பயணமாக பயணித்தது. உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் ஆரம்ப காலங்கள் நினைவுகளாக உலா வரும் இந்த வீட்டில் 2003-ம் ஆண்டு வரை வெவ்வேறு நபர்கள் வசித்து வந்தனர்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முயற்சியால்தான் ராமானுஜன் வாழ்ந்த வீடு பாதுகாக்கப்பட்டது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் இப்போது இந்த வீட்டை நிர்வகித்து வருகிறது. கணித மேதை வாழ்ந்த இந்த வீட்டுக்கு ஒரு விசிட்டை போடுங்கள். செல்பி எடுத்து நம் கணித மேதையின் புகழை இன்னும் உயர்த்துங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Breaking News LIVE:  விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  29 வேட்பாளர்கள் களத்தில்!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பாளர்கள் களத்தில்!
"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
செங்கல்பட்டு: மதுவுக்கு எதிராக மாணவர்களுடன் மாஸ் காட்டிய மாவட்ட ஆட்சியர் - குவியும் பாராட்டு
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
NEET PG 2024 Exam: ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு எப்போது?- வெளியான தகவல்
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Silambarasan - Vengal Rao: மருத்துவ உதவி கேட்ட வெங்கல் ராவ்.. யோசிக்காமல் சிம்பு செய்த நிதியுதவி!
Embed widget