அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு.. அதிர்ச்சி..
சைல்டு லைனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி உரிய அறிக்கை பெற்று கார்த்திகை சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கணித ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் புகார். தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவு
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சைல்ட் லைன் எண்ணிற்கு அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதே போன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஆணை குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி என்பவர் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஏழுக்கும் மேற்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் அளித்த புகாரியின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆதமங்கலம் செல்வபுரம் மூலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி என்பவர் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கார்த்திகை சாமி கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி விசாரணை அறிக்கையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜனிடம் சமர்ப்பித்துள்ளார்.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கணித ஆசிரியர் கார்த்திகை சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக பணிபுரியும் கார்த்திகை சாமி என்பவர் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கணித கார்த்திகை சாமி தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திகை சாமிக்கும் தலைமை ஆசிரியருக்கும் ஏற்கனவே பலமுறை கருத்து வேறுபாட்டால் பிரச்சனை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது எப்படி இருப்பினும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும்போது உடனடியாக மாணவர்கள் சைல்ட் லைன் ஹெல்ப் எண்ணான 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரையடுத்து சைல்டு லைனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் கொடுத்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து உரிய அறிக்கை பெற்று கார்த்திகை சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.