மண் குளியல்... ஷவர் பாத்; குதூகலிக்கும் அபயாம்பாள்!

கோடை வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள தோட்டத்தில் மண் குளியல் போட்டு, ஷவர் பாத்தில் ஆனந்தக்குளியலிட்டு குதூகலிக்கிறது மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள்.

FOLLOW US: 

கோடை வெயிலின் தாக்கத்தை போக்கிக்கொள்ள தோட்டத்தில் மண் குளியல் போட்டு, ஷவர் பாத்தில் ஆனந்தக்குளியலிட்டு குதூகலிக்கும் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாள்.மண் குளியல்... ஷவர் பாத்; குதூகலிக்கும் அபயாம்பாள்!


கடந்த சில தினங்களுக்கு முன்பாக அக்னி நட்சத்திரம் முடிந்தும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதர்களே போராடி வரும் நிலையில் கால்நடைகளின் பாடு திண்டாட்டம்தான். 


இந்நிலையில், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில். இந்த கோயில் உள்ள யானைதான் அபயாம்பாள். இந்த அபயாம்பாள் யானை இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்லப்பிள்ளை, கோவிலுக்கு குழந்தைகளுடன் குடும்பத்துடன் வருபவர்கள் அபயாம்பாளை கண்டு மகிழ்ச்சி அடைவதுடன் அதனிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வர். கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அபயாம்பாள் யானை கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக யானை அபயாம்பாள், பக்தர்களின் வருகை, கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததால் யானை கட்டும் கொட்டகையிலையை உற்சாகமின்றி இருந்து வருகிறது. மண் குளியல்... ஷவர் பாத்; குதூகலிக்கும் அபயாம்பாள்!


இந்த சூழலில் காலை வேளையில் கொட்டகையில் இருந்து அவிழ்த்து வரப்பட்டு, கோவில் தோட்டத்தில் கட்டப்பட்டதால் அபயாம்பாள் உற்சாகம் அடைந்து தோட்டத்தில் உள்ள மண்ணை ரசனையுடன் தனது துதிக்கையால் உறிஞ்சி தனது தலையில் கொட்டிக் கொண்டு  விரும்பி விளையாடுகிறாள் அபயாம்பாள். 


அதனைத் தொடர்ந்து அபயாம்பாள் யானை குளித்து மகிழ்வதற்காக கோயிலில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஷவரில் கோடையின் வெப்பத்தை போக்கிக் கொள்ள தினசரி ஷவர் பாத்தும்  எடுத்துவருகிறாள் யானை அபயாம்பாள். உதவி யானை பாகன் வினோத் ஷவர் பாத்தில் குளிக்க வைக்க, அபயாம்பிகை யானை ஷவர் பாத்தில் நனைந்து ஆனந்தம் அடைந்து உற்சாகத்துடன் குளித்து வெயிலின் தாக்கத்தை தணித்து குதூகலமடைகிறது.மண் குளியல்... ஷவர் பாத்; குதூகலிக்கும் அபயாம்பாள்!


கொரோனா ஊரடங்கு இல்லாத காலங்களில் அபயாம்பாள் ஷவர் பாத் எடுக்கும் அழகை காண கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்து யானை ஷவரில் குளிக்கும் அழகை கண்டு மகிழ்வார்கள். அதற்கு தகுந்தார்போல் அபயாம்பாளும் சுற்றி நிற்கும் மக்கள் குழந்தைகள் மீது குதூகலத்தில் தண்ணீரை பீச்சி அடித்து அனைவரையும் மகிழ்விக்கும்.
கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடியும்? தமிழகத்தில் உள்ள முழு ஊரடங்கு எப்போது தளர்வு பெற்று கோவிலுக்குள் அனுமதிப்பார்கள் எனவும் மீண்டும் யானை அபயாம்பாளின் சேட்டைகளை காணமுடியும் என ஏராளமான பொதுமக்களும் குழந்தைகளும் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ,பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், இதனால் தற்கொலைகள் அதிகமாக நிகழ்வதாகும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  இதுபோன்ற நேரத்தில் யானையின் செயலை தன்னை மறந்து ரசிப்பதால் மன அழுத்தம் குறைவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: temple elephant apayammpal mayiladuthurai elephant elephant both

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்துக்கு இன்னும் 10 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி தேவை : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

தமிழகத்துக்கு இன்னும் 10 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி தேவை : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: கல்வி அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: கல்வி அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!